1961 இல் உதைப்பந்தாட்ட வீரர்களுடன், காணாமல் போன விமானம் கண்டு பிடிக்கபட்டது
சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன் சிலி கால்பந்தாட்ட அணி வீரர்களுடன் காணாமல் போன விமானம், மலையேறும் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி லான் சிலி டக்ளஸ் டிசி-3 என்ற விமானம் மாயமானது. சான்டியாகோவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மௌலே பகுதியில் மலையேறும் வீரர்கள் கண்டுபிடித்த விமானத்தின் பாகங்கள் தான் அவை என்று தெரிய வந்துள்ளது.
அப்பகுதியில் ஏராளமான பொருட்கள் சிதறி கிடப்பதாகவும், ஏராளமான மனித எலும்புகளும் இருப்பதாகவும் மலையேறும் வீரர்கள் கூறியுள்ளனர்.
இதுவரை மாயமான விமானம் என்ற நிலையில் இருந்து, விமானத்தின் இறுதி முடிவு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விமானத்தில், சிலி நாட்டு கால்பந்தாட்ட அணியின் வீரர்கள் உட்பட 34 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment