சமிதா சமன்மலிக்கு 180 மில்லியன் ரூபாவை நட்டஈடாக, வழங்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசத்திற்கு மகுடம் நிகழ்வில் ஏற்பட்ட விபத்தொன்றில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சமிதா சமன்மலிக்கு 180 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமன்மலி கடந்த 2008 ஆம் ஆண்டு, மருத்துவ கல்லூரி மாணவியாக இருந்தபோது விபத்தொன்றில் சிக்கிக்கொண்டார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இருந்த கூடாரம் ஒன்று உடைந்து விழுந்தமையால் அவரது உடலின் ஒரு பகுதி செயலிழந்து போனது.
எனினும் அவர் ஓரளவு குணமடைந்து தனது உயர் கல்வியை பூர்த்தி செய்து தற்போது மருத்துவராகவும் சேவையாற்றி வருகிறார்.எனினும் அவரால் எழுந்து நடக்கமுடியாமல் போனது. இவ்விபத்தானது கவனயீனத்தால் ஏற்பட்டதொன்றென கூறிய நீதிபதி இத்தொகையை வழங்குமாறு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் முகாமைத்துவதற்கு உத்தவிட்டப்பட்டுள்ளது.

Post a Comment