Header Ads



ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 108 பேர் உயிருடன் புதைந்து மரணம்

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலின் வடக்கு பகுதியில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மலைப்பாங்கான இந்த பகுதியில் சுழற்றி அடித்த சூறைக்காற்றின் விளைவாக இன்று திடீரென பனிச்சரிவும் ஏற்பட்டது. 

இரண்டு நாட்களாக மிரட்டி வரும் இந்த பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவில் சிக்கி பஞ்ச்ஷீர் மற்றும் பாமியான் மாகாணங்களை சேர்ந்த 100-க்கும் அதிகமானோர் பேர் உயிருடன் புதைந்து இறந்து விட்டதாகவும், பனிக்குவியலில் சிக்கியிருக்கும் மேலும் சிலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பஞ்ச்ஷீர் மாகாண கவர்னர் அப்துல் ரஹ்மான் கபிரி அறிவித்துள்ளார். 

இதுவரை 108 பேர் இறந்திருப்பது தெரியவந்துள்ளதாக இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணைய துணை இயக்குனர் தெரிவித்தார். பஞ்ச்ஷீர் மாகாணத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான வீடுகள் கடுமையாக சேதம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். 

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவின் தாக்கம் உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என உள்ளூர் ஊடகங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.