1 குற்றம், 2 தண்டனை - சீனாவில் நிரபராதியை தூக்கிலிட்ட பரிதாபம்
சீனாவில் 1996ஆம் ஆண்டு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹூக்ஜில்ட் என்ற 18 வயது இளைஞர் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை பெற்றார். கடந்த ஆண்டு அவருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த ஷாவோ ஷிஹாங் (42) என்பவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை செய்தனர்.
அப்போது, 1996ஆம் ஆண்டு நிகழ்ந்த பலாத்காரம் மற்றும் கொலைக் குற்றத்திலும் ஷாவோ ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனால், கடந்த ஆண்டு தூக்கிலிடப்பட்ட ஹூக்ஜில்ட் நிரபராதி என்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், குற்றவாளி ஷாவோ, நிரபராதியான ஹூக்ஜில்ட் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, ஷாவோக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஒரே ஒரு குற்றத்துக்காக இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதும், நிரபராதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக தனது இன்னுயிரை இழந்திருப்பதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் சீனாவில் மரண அண்டனை அதிக அளவில் நிறைவேற்றப்படுவதாகவும், அது குறித்து உண்மையான புள்ளி விவரத்தை அந்நாட்டு அரசு வெளியிடுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
Post a Comment