சரத் பொன்சேகாவிற்கு NO
-VI-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியிருந்தாலும் அவர் இழந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாதென சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொழும்பு மாவட்டத்தில் அக்கட்சியில் போட்டியிட்ட ஜயந்த கெட்டகொட வகித்து வருகின்றார். அவர் அப்பதவியை இராஜினாமா செய்தாலும் அப்பதவியைப் பெற்றுக்கொள்ள சரத் பொன்சேகாவுக்கு சட்ட ரீதியான தடைகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்தாலும் அந்த வெற்றிடத்துக்கு அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பட்டியலில் அடுத்ததாகவுள்ள நபருக்கே அப்பதவி உரித்தாகும். அதன்படி அப்பதவி அப்பட்டியலில் அடுத்ததாகவுள்ள சரத் மனமேந்திராவுக்கே கிடைக்கலாம் எனவும் சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொடுக்க அக்கட்சியின் தேசிய பட்டியலில் இருந்து ஒருவர் இராஜினாமா செய்தால் மட்டுமே சாத்தியமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment