Header Ads



சட்டமுதுமாணி (LLM)) பட்டம் பெற்றார்

சட்டத்தரணி எம்.ஐ.எம் அஸ்வர் பிரித்தாணிய கார்டிஃப் மெட்ரோபொலிடன்  பல்கலைக்கழகத்தில் (Cardiff Metropolitan University, UK)    தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் ( Information Technology Law & E-Commerce Law )  சட்ட முதுமாணிப்பட்டத்தினை விசேட சித்தியுடன் (Merit)  தேற்றியுள்ளார்.

கடந்த 22 நவம்பர் 2014 அன்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்; கார்டிஃப் மெட்ரோ பொலிடன் பல்கலைக்கழக உப வேந்தரால் இவருக்கான சட்ட முதுமாணி பட்டம் வழங்கப்பட்டது.

இவருடைய சட்ட முதுமாணிப்பட்டத்திற்காக கணனிக் குற்றங்கள் தொடர்பான சட்ட ஆய்வும், உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவர், கொழும்பு   பல்கலைக்கழகத்தில் 2000 ஆம் ஆண்டு சட்ட இளமாணிப்பட்டத்தினை இரண்டாம் வகுப்பு மேற்பிரிவில் சித்தியடைந்திருந்தார் (LLB (Hons).  1997 ல் நடைபெற்ற சட்ட இளமாணி முதலாம் ஆண்டப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றதன் அடிப்படையில் மாணவர் பிரதிநிதிகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் 1998 இல் இடம் பெற்ற  50 வது ஆண்டுவிழா மகா நாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றார்.

இவர் 1998 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழக சட்டபீட சங்கத்தில் அன்றைய தலைவராக இருந்த உயர்நீதிமன்ற நீதிபதி மார்க் பெர்ணான்டோ அவர்களால் சட்டப் பயிற்சி பெறுவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் கீழ் அமர்த்தப்பட்டாh.; 

மேலும் 1998 இல் நடைபெற்ற சட்ட இளமாணி இரண்டாம் ஆண்டு பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றதன் அடிப்படையில் கொழும்பு பல்கலைக் கழகத்தால் ஹைட்றாமணி ஞாபகார்த்த புலமைப் பரிசில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இவர், 2000 ஆம் ஆண்டு சட்ட இளமாணி பரிட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 2001 இல் கொழும்பு பல்கலைக் கழக சட்ட பீடத்தின் வருகை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு 2003 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். 

இவர், 2000-2003 காலப்பகுதியில் சட்டம் மற்றும் சமூகநம்பிக்கை நிதியத்தில் சட்ட ஆய்வு உதவியாளராக   2003 வரை பணியாற்றினார். இக்காலப் பகுதியில் இந்நிதியத்தின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான நிறுவனமும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து பெங்களு}ர் சட்டக் கல்லூhயிpல் நடாத்திய மனிதபிமான சட்டம் மற்றும் அகதிகள் சட்டம் தொடர்பான பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்கான புலமைப் பரிசில் பெற்றுள்ளார்.  
இவர், 2001 ஆம் ஆண்டில், இலங்கை சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி மார்லின் மற்றும் மூத்தசட்டத்தரணி என் எம் சஹீட் ஆகியோருக்கிடையில் பயிற்சி பெற்று 2002 ல் இலங்கை உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாகினார்.

இவர், 2008 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை BCAS Campus  இல் சிரேஷ்ட வருகை சட்ட விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.

இவர் காத்தான்குடி  அல் ஹிரா வித்தியாலயம்,  காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகியவற்றின் பழைய மாணவரும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் மர்ஹூம் ஏ.எல்.எம் இப்றாலெவ்வை  மற்றும் லதீப்நிசா இப்றாலெவ்வை ஆகியோரின் புதல்வருமாவார்.

1 comment:

  1. Congratulations. Good achievements. Keep going..Alhamthulilah

    ReplyDelete

Powered by Blogger.