Header Ads



ஒபாமாவைக் கட்டிப்பிடிக்கும் மோடியின் புகைப்படத்திற்கு, LIKE போட்ட பேஸ்புக் உரிமையாளர்

இன்று 25-01-2015 இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை மோடி அன்போடு கட்டுப்பிடிக்கும் புகைப்படம் எடுக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப் பூர்வமான பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.

அடுத்த நொடியே லைக்குகளும் கமெண்டுகளும் அடைமழையாய் பொழிந்தது. இதுவரை 10 லட்சம் பேர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். அதில் ஒருவர் பேஸ்புக்கை உருவாக்கிய மிக இளம் வயதில் டைம் இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற ‘மார்க் ஸக்கர்பெர்க்’.

மேலும் இதுவரை ஒபாமாவை வரவேற்று 25000 கருத்துகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.