தமிழர்களிடம் செல்வாக்கு பெற்ற மஹிந்த ராஜபக்ஷ.
-துறையூர் அப்துல் பாஸித்-
நடந்து முடிந்த ஜனாதிபதிதேர்தல் பல்வேறுபட்ட படிப்பினைகளையும் பாடங்களையும் அணைத்து தரப்பிற்கும் புகட்டி நிற்கின்ற இந்த வேளையில் இதுவரையும் யாரும் கணித்திராத, ஒரு இலை மறை காயாய் பொதிந்திருக்கும் உண்மையை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
அனைத்து சமூகத்திற்கும் ஒரு சுக வாழ்வு, சுபீட்சம் வேண்டி எடுத்த பாரிய முயற்சி மற்றும் தியாகத்திற்கு கிடைத்த வெற்றியாய் இருக்கும் இந்த தேர்தல் முடிவானது, ஒரு குறித்த சாராருக்கு மாத்திரம் உரியது என்று உரிமை கோருவதானது, பேரினவாத மக்களின் மத்தியில் எதிரியை மீண்டும் எழுச்சி அடைய வைக்கும் ஒரு களமாய் அமைந்து விட கூடாது என்பதற்காக இந்த அணுகுமுறை துணை நிற்கட்டும்.
ஏனென்று சொன்னால் இன்று பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் வரும் கட்டுரைகளும் அவை தங்கி நிற்கும் வார்த்த பிரயோகங்களும் ஒரு சாதாரண சிங்கள மகனையும் சீற்றமடைய வெய்க்க கூடியதாகவும், மகிந்த ராஜபக்ஷ மேல் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்துவதாயும் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உச்ச நிலை செல்வாக்கு மிக்க காலமாய் திகழ்ந்தது கடந்த 2010 ஜனாதிபதிதேர்தல் காலமாகும். ஆனால் கடந்த 2010 தேர்தல் முடிவுகளுடன் இம்முறை தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு பார்கின்ற பொழுது 8 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ஷ அதிகமான வாக்குகளை பதிவு செய்துள்ளதை காண முடிகின்றது. மற்ற அனைத்து (14) மாவட்டங்களிலும் மகிந்த ராஜபக்ஷ 2010இல் பெற்ற வாக்குகளை விட மிக குறைவான வாக்குகளையே பெற்றிருக்கும் அதே வேளை, இலங்கையில் எந்த ஒரு மாவட்டத்திலும் 2010இல் சரத் பொன்சேகா பெற்ற வாகுகளை விட குறைவான வாக்குகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனால் மகிந்த ராஜபக்ஷ அதிக வாக்குகளை பதிவு செய்த 8 மாவட்டங்களில் முதலிடமும் அதீதமாய் வாகுகள் அதிகரித்த மாவட்டமாயும் பதிவாகி இருப்பது யாழ்ப்பாணம் மாவட்டமாகும். கடந்த 2010 தேர்தலில் 44,154 வாக்குகளை பெற்றிருந்த மகிந்த இம்முறை 74,454 வாக்குகளை பெற்றிருக்கின்றார், எனவே மேலதிகமாக 30,300 யாழ்ப்பான மக்கள் மகிந்தவை ஆதரித்து இருக்கின்றனர், இந்த அதிகரிப்பானது இலங்கையில் வேறு எந்த மாவட்டத்திலும் மகிந்தவால் பெற முடியாமல் போன அதிகரிப்பாகும், தனது சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் கூட மகிந்த ராஜபக்ஷவால் 16,408 மேலதிக வாக்குகளே பெற முடிந்தது. அதே போல் மகிந்தவின் செல்வாக்கு அதிகரித்த மற்றுமொரு தேர்தல் மாவாட்டம் வன்னி மாவட்டமாகும். கடந்த 2010 தேர்தலில் ரிஷாத் பதுர்தீனின் முழு ஆதரவுடன் மகிந்த பெற்ற வாக்குகள் 28,740, ஆனால் இம்முறை ரிஷாத் மற்றும் ஹுனைஸ் அணி எதிர்த்து நின்ற போதிலும், மகிந்த 34,377 வாக்குகள் பெற்றுள்ளார், இவை அனைத்தும் தமிழ் மக்களின் வாக்குகளாகும்.
எனவே 2010ஆம் ஆண்டை விட இம்முறை தமிழ் மக்கள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிக செல்வாக்கு பெற்றிருக்கும் அதே வேளை, பேரினவாத சிங்கள மக்கள் மத்தியில் பாரிய வீழ்ச்சி அடைந்திருப்பத்தையும் காண முடிகிறது. அந்தவகையில், 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மகிந்த அதிக வாக்கு வீழ்ச்சி கண்டிருப்பது கம்பஹா மாவட்டத்திலாகும். அதை அடுத்து கொழும்பு, பொலநறுவை மற்றும் கண்டி மாவட்டங்களிலாகும். மேலுள்ள மாவட்டங்களில் முறையே, 54,369, 52,126, 39,429, 28,051 என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளார். அதே போல் கேகால, அனுராதபுர, காலி, குருநாகல் போன்ற பேரினவாத மக்கள் செறிந்து வாழும் நகரங்களிலும் மகிந்த 2010ஆம் ஆண்டை விட பாரிய வாக்கு வீழ்ச்சியடைந்து இருக்கின்றார், எனவே தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரித்த மகிந்த ராஜபக்ஷ சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தமை அவரது தோல்வியில் பாரிய செல்வாக்கு செலுத்தியிருக்கின்றது.
வடக்கின் வசந்தம், யாழ் தேவி போன்ற பாரிய அபிவிருத்தி செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்களின் மனதை வென்றுள்ளதன் விளைவே அவரது வாக்கு வங்கி அதிகரித்தமைக்கான காரணமாக அமைய முடியும். இருந்த பொழுதிலும் ஏனைய சமூகங்களின் வெறுப்பை சம்பாதிக்கும் நடவடிக்கைகளை தடுக்காமல் இருந்தமையும் அவரது இன்றைய நிலையின் காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை.
எது எப்படியோ நாடளாவிய ரீதியில் அனைத்து சமூகமும் ஒரு நல்ல மாற்றத்தை எதிர்பார்த்து இருந்தமை வாக்களிப்பு வீத அதிகரிப்பின் மூலம் மிக தெளிவாக புலப்படுகின்றது.
வடக்கில் தனது சொந்த வாக்கு வங்கியை மகிந்த ராஜபக்ஷ கணிசமாக அதிகரித்து கொண்ட பொழுதிலும், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் தனது சொந்த வாக்கு வங்கியில் மகிந்த ராஜபக்ஷ வீழ்ச்சி அடைந்தமை குறிப்பிட தக்க அம்சமாகும்.
இவற்றை எல்லாம் தாண்டி வழமையாக வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இம்முறை ஆர்வத்துடன் கலந்து கொண்ட மூவின மக்களும், புதிதாக வாக்களிக்க தகுதி பெற்ற இளைஞ்சர்களும் ஓரணியில் நின்று ஒரு ஆட்சி மாற்றத்தை வேண்டி வாக்களிதமையே இம்முறை மைத்ரி பால பெற்ற வெற்றியின் முக்கிய காரணி என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
எனவே இலங்கையில் வாழும் மூவின மக்களும் வேண்டி பங்களிப்பு செய்த வெற்றி இன்று எம் கைகளில் தவழும் இந்த சந்தர்ப்பத்தில், இந்த வெற்றின் சொந்தக்காரர்கள் யார் என்ற மமதயினை தேடி அலைவதை விட இந்த வெற்றியின் மூலம் எம் நாட்டை வெல்வது எவ்வாறு என்பதை அடைவதே ஆரோக்கியம் என்று நாம் கருதுகின்றோம்.
அதனை விடுத்தது, மகிந்தவை நாம் பழிவாங்கி விட்டோம், அளித்து விட்டோம் என்று மடமைத்தனமான வீர வசனங்கள் பேசுவது மீண்டும் எம்மை நாமே அளிப்பதற்கு வழி வகுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எனவே அன்பார்ந்த தமிழ் பேசும் சகோதரர்களே எமக்கு தேவை பெற்ற வெற்றில் கோரும் உரிமை கிடையாது, மீண்டு ஒரு அழிவு வராமல் தடுப்பதே, அவ்வாறு தடுக்க வேண்டுமென்றால் பேரின சமூகத்தின் மிக பெரும்பான்மயானவர்கள் இந்த ஆட்சியை தாங்கி நிற்க வேண்டும். இந்த வெற்றியின் உருமையை அவர்களே கோரும் அளவிற்கும் நாம் வழிவிட வேண்டும் இல்லையென்றால் நமது நடவடிக்கைகளால் அவர்கள் மீண்டும் மகிந்தவை ஆட்சிபீடம் ஏற்றிவிடும் அபாயம் எம்மை நோக்கி வந்துவிடும்.
எனவே யதார்த்த ரீதியான சூழலை புரிந்து கொண்டு எமது வெற்றியை தக்க வெய்த்து கொள்வது எப்படி என்பதை சிந்தித்து செயல்படுவதே எமக்கு ஆரோக்கியமாய் அமையும்.
இதில் யாருக்காவது உடன்படாத கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து அறியத்தரவும்.
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
மேற்படி கட்டுரை யதார்த்த பூர்வமானது .இந்நாட்டு அரசியலை பொருத்தவரை இரண்டு பிரதான கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்வது வழக்கமான ஒரு விடயமாக உள்ளது .எனவே இந்நாட்டு முஸ்லிம்கள் இறைவன் வெறுக்க கூடிய வீண் பெருமைதனத்திலிருந்து தங்களை பாதுகாத்து கிடைக்கப்பெற்ற வெற்றிக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடியவர்களாக இரண்டு பிரதான கட்சிகளுடனும் நல்ல உறவை பேணி வருவதுதான் ஒரு நல்ல முஸ்லிமின் பண்பாக இருக்க முடியும் .மேலும் தற்போதைய நிலைமையில் தோல்வியடைந்தவர்களுடன் ஆறுதல் அளிக்கும் வகையில் சந்திப்புக்களை ஏற்படுத்தினால் அது எமது இஸ்லாத்தில் காணப்படும் பெருந்தன்மையை அவர்களுக்கு காண்பிக்கும் சந்தர்ப்பமாக நிச்சயம் அமையும் .ஒரு சிறந்த இஸ்லாமிய பிரச்சாரகன் தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நன்கு பயன்படுத்திக்கொள்வான் .
nice & very correct
ReplyDelete