முதலமைச்சர் பதவிக்கு ஜெமீல் பொருத்தமானவரா..?
-டாக்டர் என். ஆரிப்-
மாற்றம்...மாற்றம்...மாற்றம்...
இது மாற்றத்தின் பருவகாலமோ? ஆட்சி மாற்றம், அதிகார மாற்றம், பதவி மாற்றம், இருப்பு மாற்றம் என்று பலவிதமான மாற்றங்கள் கடந்த சில நாட்களாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் இடம்பெறுவது காலத்தின் கட்டாயமாகி விட்டது போலுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணியும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்து கொண்டிருக்கையில் மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், முஸ்லிம் காங்கிரசு பொது வேட்பாளரை ஆதரித்து வெற்றி கண்டதன் காரணமாகவும் கிழக்கு மாகாண சபையில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்ய வேண்டியிருக்கும். அப்படி வருகின்ற போது அதிகாரங்களும் பதவிகளும் இரு கட்சிகளுக்குமிடையிலும் பகிரப்படுவது தவிர்க்கமுடியாததாகி விடும். அதில் முக்கியமாக முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுவது மட்டுமல்ல, சர்ச்சைக்குரிய விடயமாகவும் மாறலாம்.
களநிலவரப்படி முதலமைச்சர் பதவியானது முஸ்லிம் காங்கிரசையே சென்றடையும். அவ்வாறு முஸ்லிம் காங்கிரசுக்குத் தான் முதலமைச்சர் பதவி என்றாகி விட்டால், அதனை யாருக்குக் கொடுப்பது என்ற பிரச்சினை மீண்டும் சூறாவளியாக உருவெடுக்கும். பலரது பெயர்கள் முன்வைக்கப்படலாம். இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவுப் ஹக்கீம் அவர்களே இறுதி முடிவெடுப்பார். ஆயினும் அவ்வளவு இலேசான விடயமாக அது இருக்கப்போவதில்லை.
பலரது பெயர்கள் முதலமைச்சர் பதவிக்காக முன்வைக்கப்படலாம் என்றாலும் அவர்களுள் முஸ்லிம் காங்கிரசின் குழுத்தலைவராகச் செயற்பட்ட சகோ. ஜெமீல் அதற்குப் பொருத்தமானவராக மக்களால் கருதப்படுகின்றார். கல்முனை மாநகர சபை உறுப்பினராகவும், ஒப்பீட்டடிப்படையில் கணிசமான கூடுதலான வாக்குகளைப் பெற்று மாகாண சபையின் உறுப்பினராகவும், அதன் குழுத்தலைவராகவும் செயற்பட்டு வருகின்ற சகோ. ஜெமீல் முதலமைச்சர் பதவியை திறம்படச் செய்வார் என்று எதிர்பாரக்கலாம்.
ஆரம்பத்தில் மாகாண சபையில் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று இறுதி நேரம் வரை எதிர்பார்க்கப்பட்டு, கிட்டத்தட்ட ஏமாற்றப்பட்டு குழுத்தலைவர் பதவி வழங்கப்பட்டு சமாளிக்கப்பட்டவர். இளம் வயதானாலும் துடிப்புடன் செயற்படக்கூடியவர். அவ்வாறு முதலமைச்சர் பதவி வழங்கப்படும்போது கிழக்கு மாகாணத்துக்கு சிறப்பானதொரு சேவையை வழங்குவார் என்று எதிர்பார்ப்பதுடன், அவரின் சொந்த ஊரான சாய்ந்தமருதின் நீண்ட காலத்தேவைப்பாடொன்றை நிறைவேற்றி வைப்பதில் முழு மூச்சாக செயற்படுவார் எனவும் எதிர்பார்க்கலாம்.
Jameel is a young and energetic politician, he can do better than other SLMC members in the council
ReplyDeleteடாக்டர் ஆரிப் சாய்ந்தமருதின் நீண்ட காலத்தேவை என்ன? அந்த தேவையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரால் செய்யமுடியுமா? பாராளுமன்ற உறுப்பினர் செய்யவிடுவாரா? யாருக்காக அந்த தேவைப்பாடு அரசியல்வாதிகளுக்கா? மக்களுக்கா? தலைவர் அஷ்ரப் ஏன் அதை செய்யவில்லை? அதாஉல்லாஹ்வால் செய்யமுடியாததை ஜெமீல் என்ற தனிநபரால் செய்ய முடியுமா? எதிர்காலத்தில் கல்முனை தொகுதியின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பிரதேசவாதத்தினால் இழக்க நேரிடும். எது நமது தேவை. நமக்கு என்ன தேவை. இது ஊர் தேவையா? உறுப்பினரின் தேவையா? சாய்ந்தமருது?
ReplyDeleteDr.Arif அவர்களே, ஒன்று செய்யலாம் கல்முனை மாநகர சபை என்பதை சாய்ந்தமருது மாநகர சபை என மாற்றம் செய்தால் உங்களை போன்றவர்களின் பிரச்சினை தீர்ந்து விடுமே..!!!
ReplyDeleteபிரதேசவாத பித்தர்கள்.
First of all tell to MR. Jameel go to the Pc meeting with out absent
ReplyDelete