மைத்திரி அமைச்சரவையில் புயல், ராஜித எதிர்ப்பு, சம்பிக்க சமாளிப்பு, ரணில் பொறுப்பேற்பு
-GTN-
மத்திய வங்கி ஆளுநராக அர்ச்சுனா மகேந்திரனை நியமிக்கும் முடிவிற்கு அமைச்சரவையிவ் கடும் எதிர்ப்பு வெளியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
புதிய ஜனாதிபதியின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் புயலடித்தது.மத்திய வங்கி ஆளுநராக அர்ச்சுனா மகேந்திரனின் பெயரை பிரதமமந்திரி ரணில்விக்கிரமசிங்க பிரேரரித்த வேளையே இந்த நிலை உருவானது.
மகேந்திரனின் நியமனத்திற்கு சுகாதார அமைச்சர் ராஜிதசேனரத்தின தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டார். மகேந்திரன் ஒரு வெளிநாட்டு பிரஜை என குறிப்பிட்டார்.
இந்த வாக்குவாதத்திற்கு தீர்வை காண்பதற்கு எரிசக்தி அமைச்சர் சம்பிக்கரணவக்க முயன்றார், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல பிரதமருக்கு ஆதரவாக கருத்துவெளியிட்டார்.
பின்னர் இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதியும் தலையிட வேண்டிய நிலை உருவானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்திற்கு தான் பொறுப்பேற்பதாக தெரிவித்தார்.
இதேவேளை புதிய மத்திய வங்கி ஆளுநருக்கு ஜனவரி 29 ம் திகதிக்கு முன்னர் இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படலாம் என தெரியவருகின்றது.
Post a Comment