''நான் மனசாட்சிக்கு இணங்க, எந்த குற்றச் செயலும் செய்யாத காரணத்தால்''
தமக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் ஜே.வி.பி முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தாம் விசாரணைகளுக்கு முகம்கொடுக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் நேற்று ஊழல், மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் தமது முறைப்பாடுகளை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக hfm நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், தானோ, தனது குடும்பத்தில் எவருமோ குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுப்பதனால் வேறு எந்த விடயங்களும் தொடர்புபடாமல் இருக்குமாயின் விசாரணைகளை எதிர்கொள்ள தயார் என தெரிவித்தார்.
ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்தது.
ஆனால், அதுபற்றி எங்களுக்கு விளக்கமளிக்கப்படவில்லை.
நான் மனசாட்சிக்கு இணங்க எந்த குற்றச் செயலும் செய்யாத காரணத்தால், அதற்கு நேரடியாக முகம்கொடுக்க தயாராக இருக்கிறேன்.
எங்கள் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில், அரசியல் செயற்பாடுகளை சீர்குழைக்கும் வகையிலும், இவ்வாறான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.
நாங்கள் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல குற்றச்சாட்டுகள் இணையத்தளங்கள் ஊடாகவும் அரசியல் தரப்பினர் ஊடாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் முதல் மனிதராக இருந்த ஒருவரின் புதல்வராக இருக்கின்றமையின் பிரதிபலன்தான் இவை.
அதற்கு வேறொன்றும் மாற்றும்வழி இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
cour suit udukkkura moonjaada nee..sarind need umuda(weddan udukkurazu) adichuttu kaatula irukka wendiyawan
ReplyDeleteசரியாகவே தலைப்பிட்டுள்ளீர்கள். மனச்சாட்சிக்கு இணங்க எந்தத் தவறையும் இவர் செய்யவில்லை என்பது உண்மை. மனச் சாட்சிக்கு விரோதமாகத்தானே இத்தனை அநியாயங்களையும் செய்து கோடி கோடியாக மக்களின் பணத்தை தந்தையேடு சேர்ந்து சூறையாடியுள்ளார். இவர்களின் அத்தனை சொத்துக்களும் ஏலத்தில் விற்பனை செய்து இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கிறையில் அடைக்க வேண்டும். இவர்கள் ரெஸ்பெக்ட் சமூகத் துரோகிகள்.
ReplyDelete