ரணிலுக்கு, நரேந்திர மோடி
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் இலங்கை வாழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளதாக நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான நல்லிணக்கம் மற்றும் ஒன்றிணைவின் ஊடாக இலங்கையில் சமாதானத்தையும், அபிவிருத்தியையும் அடைந்துகொள்ள முடியும் என நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமருடன் நெருங்கமாக செயற்பட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இந்திய பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment