புதிய கூட்டணிக்கு தலைமைதாங்க மஹிந்தவுக்கு அழைப்பு, கோத்தாவையும் இணைக்க முயற்சி
புதிய அரசியல் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது போட்டியிடுவதற்கு புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
சில அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளன.
மக்கள் ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றன.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இந்த கூட்டணியில் இணைத்து கொள்வது குறித்தும் பேசப்பட்டு வருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரும், ஓய்வு பெற்ற சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் சிலரும் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளனர்.
பேரினவாத மற்றும் தேசியவாத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓஹோ, இதைத்தானா 'புனிதக்கூட்டு' என்று சொல்வது?
ReplyDelete