பாலித தேவரப்பெருமவை, கைது செய்ய நடவடிக்கை
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான பெப்ரல் அமைப்பு காவல்துறையினரிடமும், குறித்த கட்சியிடமும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெருமவினால் அகலவத்த நகரத்தில் வைத்து பாலித நுவர பிரதேச சபையின் கூட்டமைப்பு உறுப்பினர் தாக்கப்பட்டு முழந்தால் இடச்செய்ப்பட்டமை தொடர்பில் விசேட குழுவொன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து அவர் காவல்மா அதிபருக்கு இந்த பணிப்புரையை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹணவிடம் SFM செய்தி பிரிவு வினவியது.
சம்பவம் தொடர்பில் நேற்று மூன்று பேர் மதுகமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன், பிரதான சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெருமவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment