பாராளுமன்ற தேர்தலில், கட்சி சின்னங்கள் தொடர்பில் முரண்பாடு
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது போட்டியிடவுள்ள சின்னம் குறித்து பிரதான கட்சிகளில் முரண்பாடுகள் தோன்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பெரும்பாலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது ஐக்கிய தேசிய கட்சியும், அதனுடன் இணைந்த சிறு கட்சிகளும் யானை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றன.
எனினும் அந்த கூட்டணியின் சிலத் தரப்பினர் ஜனாதிபதி தேர்தல் போன்று அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரி வருவதாக கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இது தொடர்பில் இன்னும் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சிறிலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்வைப்பதாக கூறப்படுகிற.
எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்த கட்சிகள் வெற்றிலைச் சின்னத்திலேயே அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment