மஹிந்தவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முயற்சித்தால், அது தற்கொலை செய்வதற்கு நிகரானது - அதுரலிய ரதன தேரர்
நாடாளுமன்றின் பெரும்பான்மை பலம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு உண்டு என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணகைளை தடுத்து நிறுத்த எனக்கோ அமைச்சரவைக்கோ பிரதமருக்கோ முடியாது. இருக்கும் நபர்களுக்கு தண்டனை விதிக்கும் நோக்கில் இந்த விசாரணை நடத்தப்படக் கூடாது.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தரப்பினருக்கும் பாடம் புகட்டும் வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் சுத்தமானவர்கள் என நான் கருதவில்லை.
மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட வேண்டிய மரியாதையை அளிக்க நாம் எப்போதும் தயங்கியதில்லை.
மஹிந்தவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த எவரேனும் முயற்சித்தால் அது அந்த நபர் தற்கொலை செய்து கொள்வதற்கு நிகரானதாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி நினைக்கக் கூடாது தற்போது தங்களுக்கே கூடுதல் அதிகாரம் உண்டு என. இன்னமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே கூடுதல் அதிகாரம் காணப்படுகின்றது.
தேவை என்றால் 90 நாட்களில் அல்ல 30 நாட்களில் கூட அரசியல் அமைப்பில் திருத்தங்களை செய்ய முடியும். இனவாதத்தை களைந்து தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment