கோத்தபாய ராஜபக்சவுக்கு, எதிராக ஆர்ப்பாட்டம்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக ரத்துபஸ்வெல மக்கள் இன்று 25-01-2015 வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தில் உயிர்களைப் பலிகொடுத்தும் நியாயமான தீர்வைப் பெற முடியாமல் போனதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சியனப் பிரதேச குடி நீர் பாதுகாப்பு மக்கள் எழுச்சி அமைப்பின் ஏற்பாட்டாளர் பிரமித ஹெட்டியாராச்சி இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அந்த நேரத்தில் கடமையில் இருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர், அப்பொழுது கடமையில் இருந்த இராணுவத் தளபதி அல்லது பதில் இராணுவத் தளபதி ஆகியோரை உடன் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து எமது மக்கள் திருப்திப்படப் போவதில்லை.
இது தொடர்பிலான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் நாம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளோம்.
எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்துக்கு வலியுறுத்தியே இன்று மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
குடிநீர் கேட்டு வீதியில் இறங்கிப் போராடிய மக்கள் மீது மகிந்த அரசாங்கம் துப்பாக்கியால் பதில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிலைமை இப்படியே போனால் புதிய அரசுக்கு நீதிவிசாரணை நடாத்துவதற்கு மட்டும்தான் ஆயுள் போதும் போலத் தோன்றுகின்றது.
ReplyDelete