அதாஉல்லாஹ்விற்கு பகிரங்க கடிதம்
இரவுகள் விடிந்தே தீரும் , பொழுதுகள் மறைந்திய தீரும் என்ற இயற்கயின் நியதியை நீங்கள் மறந்தது உண்மைதான் ,உங்கள் அரசியல் பயணத்தில் நீங்கள் சமூகத்துக்கு செய்த சேவைகள் மறக்க முடியாது ,அனால் நீங்கள் செய்த தவறுகள் உங்களது அபிவிருத்தியும் விட வரலாற்றின் பதிவுகளில் அதிகமாக பதிவாகி இருக்கிறது .
அதில் உங்களது அரசியல் பயணம் வாரிசுக்காக அடி எடுத்து வைத்தபோது உங்களுக்கு எட்படபோகும் இழப்புகளை எடுத்து கூறுவதற்கு உங்கள்டம் இருந்தவர்கள் முனையவில்லை ,அப்படி கூறினாலும் நீங்கள் ஏற்றுகொள்ள போவதுமில்லை ,அரசியல் சாணக்கியத்தை நீங்கள் அறவே அறிதிருக்கவில்லை ,அதற்கு காரணம் உங்களுக்கு கிடைத்த அடுக்கடுக்கான வெற்றிகள் ,அதானால் உங்களை அறியாமல் உங்கள்ளுக்குள் ஏற்பட்ட மமதை ,அதை மெருகூட்ட உங்களிடம் உங்களை சுற்றி இருந்த நகைச்சுவையாளர்கள்.
தவறான தகவல்களால் உங்களை அழிவின் பக்கம் இட்டுசென்றவர்களும் அவர்கள் தான் ,உங்களை நேசித்த உண்மையான பலரை உங்ககளுக்கு எதிரியாகியவர்களும் அவர்கள்தான்.
அக்கரைப்பற்றை நீங்கள் நேசிப்பதாக ஒவ்வொரு மூச்சும் கூறுவீர்கள் அனால் அக்கரைப்பற்று உங்களை நேசிப்பதில் இருந்து விலகுகின்றது என்பதி உங்களுக்கு யாரவது கூறினார்களா ?
அதற்கு மாநகர தேர்தலின் நீங்க எடுத்த முடிவுகள் தான் அதிகமான காரணம் ,உங்களின் வாரிசை கொஞ்சம் பொறுத்திருந்தால் நீங்கள் பாராளு மன்றத்திற்கு அனுப்பி இருக்கலாம் ,தனிப்பட சிலரின் வெறுப்புகளுக்காக அவர்களின் சிபாரிசுகளையும் ஓலைகளையும் நம்பி விட்டீர்கள் ,காடையர்களை உருவாக்கியதில் உங்களுக்கு இருக்கும்.
பங்கு மிகவும் அதிகம் ,ஆரம்பத்தில் அதை நீங்கள் செய்தாலும் பிட்காலங்களில் அதை மாற்றி இருக்காலம் ,அதிகாரம் நிலைப்பதல்ல என்ற எளிதான தத்துவத்தை உங்கள் தொடர் வெற்றிகள் உணகளுக்கு மறக்க சித்து விட்டது .
நடந்தது போகட்டும் ,நீங்கள் நன்றி கடனுக்காக மகிந்தவை ஆதரித்தீர்கள் , குறைந்து பைசர் முஸ்தபாவிடம் இருந்தாவது அரசியல் சாணக்கியத்தை கற்றிருக்க வேண்டாமா ?
உங்களை விட பல மடங்கு மகிந்தவிடம் நெருக்கமகாக இருந்தவர் அவர் அனால் அவருடைய அரசியலுக்காக அவர் தூக்கி எறியவில்லையா?
முசிலீம் காங்கிரஸ் என்ன சமூகதிட்காகவா மாறியது ? மக்களின் எழுச்சியை சரியாக புரிந்து கொண்டார்கள்,அவர்கள் தான் அரசியல் வாதிகள் .
உங்களை மஹிந்த புராணம் பாட வாய்த்த உன்களின் ஆன்மீக தலைவரை விட நீங்கள் அல்லாஹ் வை நம்பி இருக்க வேண்டாமா ?
நீங்கள் ஒரு சிறந்த மனிதர் ,யார் எது கூறினாலும் தனிப்பட ரீதியில் உங்களை எனக்கு தெரியும் ,நீங்கள் இளகிய மனம் கொண்ட ,மறைமுகாமாக தர்மங்கள் சையும் ஒரு மனிதர் ,அது எனக்கு தெரியும்.
இது அல்லாஹ் உங்களுக்கு கொடுத்திருக்கும் நல்ல சந்தர்பம் , அனுபாவங்களை படிப்பினையாக்கி கொள்ளுங்கள் , சுற்றி இருக்கும் வட்டங்களின் கருத்துக்களுக்கு செவி மடுத்து முற்று முழுதாக நம்புவதை தவிர்த்து ,உங்கள் கண்களை திறந்து கொள்ளுங்கள் , எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் தெரிவாது உறுதி, அனால் மஹிந்த புராணம் பாட வேண்டாம், அமைச்சரவையில் நீங்கள் அமவர்வது சிலபாமான விடயம் என்று உங்களுக்கு தெரியும் ,
அரசியலில் நிரந்தர எதிரி யாரும் இல்லை,அழகான திட்டத்தை வரையுங்கள் , மக்களிடம் சென்று பழைய குறைகளை நியாயப் படுத்தாமல் ,புதிய திட்டங்களை கூறுங்கள் . இன்சாஹ் அல்லாஹ் அடுத்த அமைச்சரவையில் நீங்களும் அமைச்சர் தான் .
தேசிய காங்கிரஸ் காரன்
அதவுல்லா எம் பி ஆக இருப்பது இதுதான் கடைசி முறை. வரவிருக்கின்ற புதிய தேர்தல் முறையில் அக்கரைப்பற்றிலிருந்து ஒரு எம்.பி தெரிவு செய்யப்படப் போவதில்லை.
ReplyDeleteதொகுதி வாரியான எலக்சன் முறையில் சம்மாந்துறை தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் வெல்லப்போவது இல்லை. ஏனென்றால் சம்மாந்துறை தொகுதியில் அதிகம் வாக்குகள் வைத்திருக்கும் ஊர் சம்மாந்துறை பட்டினம். அங்குள்ள வாக்குகள் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப் படுவதற்கான சாத்தியங்களே அதிகம் உண்டு.
அதே சமயம், முன்னாள் எம் பி முஸ்தபா அன்று சிறிமாவின் ஆட்சி காலத்தில் செய்த தொகுதிப் பிரிப்பு காரணமாக பொத்துவில் தொகுதியில் அதவுல்லா போட்டியிடுவதற்கு அக்கரைபற்றிலுள்ள வாக்குகள் போதாது.
ஆக மொத்தத்தில் அடுத்த தேர்தலில் நோ சான்ஸ் .
Aathaulla who is he?
ReplyDelete