''மைத்திரியிடம் நான் கேட்டுக்கொள்ளவது என்னவென்றால்'' மஹிந்த ராஜபக்ஷ
(படம் - கந்தளாயில் இன்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் பிடிக்கபட்டது)
மக்களை ஏமாற்றி, ஜனாதிபதி தேர்தலை நகைப்புக்கு உட்படுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொது வேட்பாளரை கோரியுள்ளார்.
சகல சூழ்சிகளையும் தோல்வியடைய செய்து எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை கட்டியெழுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கினிகத்தேன நகரில் இன்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் பொய் பிரசாரங்கள் முன் எடுக்கப்படுகின்றன. கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யும் போது, வெற்று இருக்கைகள் வைக்கப்படுகின்றன.
அந்த வெற்று இருக்கைகளில் அமர பெரியவர்கள் வர இருக்கிறார்கள் என கூறுகிறார்கள். இதனையே, ஜனவரி எட்டாம் திகதி வரை கூறுவார்கள்.
எனவே, ஜனாதிபதி தேர்தலை நகைப்புக்குரியதாக மாற்ற வேண்டாம் என தாம் தமது முன்னாள் செயலாளரிடம் கேட்டுக் கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Very sorry to say that, 8 is not good for you! It's good for your opponent.
ReplyDeleteவெற்றுக் கதிரையில் வந்து இருக்காவிட்டாலும் அவர்கள் வரவேண்டிய நேரத்தில் வந்து சேர்வார்கள் ஆடு காப்பணம் சும கூலி முக்காப்பணம் ஆகிவிட்டது மஹிந்த மாத்தயாக்கு கக்கூசியில் தனிமையில் இருந்து அழுவுற அச்ந்தர்ப்பம்தான் இப்போது ஏற்பட்டு விட்டது
ReplyDeleteசகோதரங்களே அதிகமாக துஆ செய்யுங்கள் இருக்கும் நாட்களை வீணாக்கி விடாமல் அதிகம் அல்லாஹ்விடம் கேளுங்கள் இந்த கொடியவனின் ஆட்சியை அடியோடு கலைக்க வேண்டி பிரார்த்தியுங்கள். அல்லாஹ்வின் இல்லங்களை இடித்தவனின் ஆட்சியை தவிடு பொடியாக்க அல்லாஹ்விடம் நம்பிக்கையுடன் மன்றாடுங்கள். எல்லாவற்றிற்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.
ReplyDelete