ஒபாமாவுக்கு குரங்குகள் இடையூறு - அமெரிக்க உளவுத்துறை, இந்திய உளவுதுறையிடம் முறைப்பாடு
டெல்லியில் அதிகமாக இருக்கும் குரங்குகளால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இடையூறு நேரக் கூடாது என்பதற்காக, சில பகுதிகளிலிருந்து குரங்குகளை விரட்டும்படி, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் இந்திய உள்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் இந்து நாளிதழ்
24-01-2015
இதற்கு தமிழ் இந்து நாளிதழில் வந்த பின்னூட்டங்கள்.
RAJA
குரங்குஎன்று தாழ்வாக நினைக்காதீர்கள். அது இந்தியர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக , ஏன் தெய்வமாக போற்றப்படுவது. அதனை அவ்வளவு சுலபமாக ஊரை விட்டு விரட்ட எந்த ஒரு உண்மையான ஹிந்துவும் ஒப்புக்கொள்ள மாட்டான் . ஒபாமாவின் இந்த வேண்டுகோள் ஹிந்துக்களையும் , எங்கள் கடவுளையும் அவமானப்படுத்துவதாக எடுத்துகொண்டு, நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும், ஹிந்துக்களின் அரசான பி ஜே பி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்
DANDY
குரங்குக்கு மாத்திரம் அல்ல எலிகளுக்கு கூட இந்தியாவில் கோயில்கள் …இவைகளுக்கு செலவளிகப்படும் பணத்தை ….வீதியில் பசியால் துடிக்கும் பிச்சைகாரர்களுக்கு கொடுக்கலாம் ...
Ramesh Sargam
இந்து அமைப்பினர் கண்டனம். குரங்கு என்று கூறாதீர்கள். பகவான் அனுமனின் வாரிசு என்று கூறுங்கள்!!
கபீர்
இராமருக்கு பாலம் கட்ட உதவியாயிருந்து என்று எழுதியுள்ளீர்களே, எப்படி விரட்ட போகின்றீர்கள்.
Srinivasan Srinivasan
யாரோ ஒரு அண்டை நாட்டுக்காரர் வருகைக்காக ஏன் நம் மூதாதையர்களை விரட்ட வேண்டும்? :)
Post a Comment