Header Ads



கோத்தபயவை பாதுகாக்க முயற்சியா..? இராணுவ பேச்சாளர் அதிரடியாக நீக்கம்

புதிய பாதுகாப்புச் செயலாளர் யூ.டி. பஸ்நாயக்கடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தொடர்பில், தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் யூ.டி. பஸ்நாயக்க வெளியிட்ட கருத்து குறித்து இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் வங்கிக் கணக்கு ஒன்று தொடர்பில் பஸ்நாயக்க கருத்து வெளியிட்டிருந்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை பாதுகாக்கும் வகையில் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும், இராணுவப் பேச்சாளரும் கருத்து வெளியிட்டுள்ளதாக தென்படுகின்றது என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதிக் கொள்கைகள் தொடர்பில் இராணுவப் பேச்சாளருக்கு எவ்வித தெளிவும் இன்றியே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முப்படைகளுக்கான ஊடகப் பேச்சாளர் பதவிகளை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் யுத்தம் இல்லாத நிலையில் இவ்வாறு ஒவ்வொரு படைக்கும் தனியான ஊடகப் பேச்சாளர் பதவிகள் அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான பணத்தை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தனது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளதாகவும், இது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச பணத்தை எந்தவொரு நபரும் தனிப்பட்ட கணக்கிலோ அல்லது அனுமதியற்ற அமைச்சின் கணக்கு ஒன்றிலோ வைப்புச் செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

2

உடனடியாக செயற்படுவதற்காக புதிய இராணுவ ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜெ.ஜயவீர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக கடமையாற்றினார். இவருக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பதவியில் இருந்த ருவான் வனிகசூரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ தலைமையகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.