'ரணில் விக்கிரமசிங்கவுக்கு, விசித்திரமான திருமணம்'
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டுக்கு ஆற்றியுள்ள சேவையை மறக்க முடியாது என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஒன்றின் மூலம் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்காக தெரிவு செய்யப்படவில்லை. இதனால் அவருக்கு விசித்திரமான திருமணம் ஒன்றை முடித்துக்கொள்ள நேரும்.
நல்லவற்றை செய்யும் போது அரசாங்கத்திற்கு நாம் ஆதரவளிப்போம் எனினும் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளின் போது நாம் அவற்றை எதிர்ப்போம்.
மஹிந்த ராஜபக்ச நாட்டுக்கு ஆற்றிய சேவையை நாம் மறந்து விட முடியாது. நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு நாட்டை மஹிந்த ராஜபக்சவே ஐக்கியப்படுத்தினார். மஹிந்த ராஜபக்ச ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும் நாம் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. தேர்தல் முறைமை மாற்றம் குறித்து பிரதமர் இன்று பேசவில்லை. இவ்வாறு 100 நாட்களுக்குள் உறுதிமொழிகளில் எத்தனை கைவிடப்படுமோ தெரியவில்லை. உண்மையான தகவல்கள் நம்பகமான அடிப்படையில் வெளியிடப்பட வேண்டும்.
சேறு பூசும் வகையிலான தகவல்களை வெளியிட வேண்டாம் என அவர் ஊடகங்களிடம் கோரியுள்ளார்.
Post a Comment