Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன..?

(எஸ்.எம்.தல்ஹா)

கிழக்கின் முதலமைச்சர் பதவி தனக்குத்தான் தற்போது கிடைக்கவேண்டும் என்று தமிழ் கூட்டமைப்பு ஒற்றைக்காலில் நிற்பது மைத்திரி ஆட்சியின் நல்லாட்சி எனும் ஜனநாயக விழிமியத்தின் ஆரம்பத்தை விதையில் நசுக்குவதற்கு ஒப்பான செயலாகும்.

தற்போது இருக்கின்ற கிழக்குமாகாண சபையின் ஆளும் ஆட்சி கட்டமைப்பானது முஸ்லிம் காங்கிரசின் கலந்தாலோசனைகளோடு மேற்கொள்ளப்பட்ட விடயமாகும் அது இன்றும் நிழல்வடிவில்தான் இருக்கிறது அவசரமாக இலங்கையில் ஏற்பட்ட ஜனநாயகத்தின் மீதான மக்கள் எழுச்சி சிறுபாண்மையினரின் அதிதபங்களிப்புடன் மத்தியில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி உலகுக்கான புதிய அரசியல் கலாசாரத்தை இலங்கையில் தொடங்கிவைத்திருப்பதை எம்மால் அறியமுடிகிறது.

நூறுநாள் வேலைத்திட்டம் என்ற விரைவான மக்கள் நலன்புரிதிட்டங்களை நடைமுறைப்படுத்தும் மைத்திரி அரசாங்கம் தனக்குவாக்களித்த சிறுபாண்மையினரின் கோரிக்கைகளை (குறிப்பாக தமிழர்களின்) சமாந்திரமாக நடைமுறைப்படுத்தி செல்வதை எம்மால் அவதானிக்கமுடிகிறது. வடமாகாண சபை அமைந்த காலம்முதல் கேட்டுவந்த சிவில்சேவை ஆளுனர்இ மக்கள் வாழ் இடங்களில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றல்இ வடக்கிற்கு வெளிநாட்டவர் வருகைக்கான பயணத்தடை நீக்கம்இ பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு திருத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்தல்இ தேசிய ஆலோசனை சபையில் சிறுபாண்மையினரின் பங்களிப்பு என குறுகிய நாட்களுக்குள் விரைவாக நல்லெண்ணம் கட்டி எழுப்பப்படுகின்ற வேளையில் தமிழர்கள் பெரும்பான்மையோடு எவ்வாறு அரசியல் சகவாழ்வு நடாத்த போராடுகிறர்களோ அது போல் சிறுபாண்மையினர்களில் இரண்டாம் நிலையில் காணப்படுகின்ற முஸ்லிம்கள் தன்னுள் ஆளப்படவேண்டும் என்ற இயக்கங்களின் வழியிலே தமிழ் கூட்டமைப்பும் ஆட்சி செய்ய விழைகின்றதா என எண்ணத்தோன்றுகிறது.

கிழக்கில் முஸ்லிம் பெரும்பாண்மையை குறைத்துக் காட்டுவதற்காக விடுதலைப்புலிகளினால் குறிப்பிடுகின்ற மட்டு, அம்பாரை எனும் மக்கள் தொகைக்கான வரையறை எம்ஞாபகங்களில் வந்து செல்வதை எம்மால் குறிப்பிடமுடியும். முதலமைச்சர் எனும் பதவி சமுகங்களை இணைக்கின்ற இறுதிக் கிரிடமாகவோ அல்லது சமுகநீதியை நிலைநாட்டுவதற்கான செங்கோலாகவோ நாம் பார்க்கவில்லை அது தார்மிக அரசியலை செய்வதற்கான ஒரு யுக்தியாகவே முஸ்லிம் சமுகத்தால் பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் எனும்பதவிக்காக முரண்டு வரிந்து கட்டிக்கொண்டு தமிழ் கூட்டமைப்பு நிற்பதை அவதானிக்கும் போது இதற்குள் ஏதும் அலாவுதீனின் அற்புதவிளக்கு இருக்கா என நாம் அச்சப்படுகிறோம்.

பேசும் போது வடகிழக்கில் முஸ்லிம்களும், தமிழர்களும் மொழியால் ஒன்றுபட்ட மொழிச் சமுகம் வேற்றுமைகளை தீர்ப்பதற்கு மொழி சிறந்த இணைப்பூடகம் என்கின்றோம். வடக்கில் தமிழர்கள் பெரும்பாண்மையான மாகாண ஆட்சி இடம் பெறுகிறது அங்கு தமிழ் முதலமைச்சர் காணப்படுகின்றார் கிழக்கில் தமிழ் பேசுகின்ற முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருப்பது மைத்திரி நல்லாட்சியின் வெளிப்பாடாக இருக்கமுடியாதா? ஏன் கடந்த முதலாவது கிழக்கு மாகாண சபை காலத்தில் விரும்பியோ விரும்பாமலோ சந்திரகாந்தன் எனும் தமிழ் சகோதரன் மாகாணசபை காலம் முழுவதும் முதலமைச்சராக இருந்தாரை இரண்டாவது மாகாண சபையில் முஸ்லிம்காங்கிரசிற்கு இரண்டாம் தவணை முதலமைச்சர்பதவி தருவது என்று மஹிந்த அரசினால் உறுதிப்படுத்தப்பட்டவிடயம் தானே இதில் விட்டுக்கொடுப்பு செய்வதில் தமிழ் கூட்டமைப்பிற்கு என்ன குறையப்போகிறது அடுத்த தவணையில் அமைகின்ற மாகாணசபையில் முஸ்லிம் மக்களின் முழு ஆதரவுடன் தமிழ் கூட்டமைப்பு முதலமைச்சரை பெற்றுக் கொள்வது எவ்வளவு சமுக முற்போக்காக அமையும் இதனை விடுத்து தான்பிடித்தது தான் சரி என்றால் சமுக இடைவெளிக்கான தூரம் அதிகரித்து செல்லும் என்பதை தழிழ் கூட்டமைப்பு விளங்கிக் கொள்ளுமா?

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்றுப் போய் சொந்தகிராமத்திற்கு போன மஹிந்தராஜபக்ஸ சொன்ன முதலாவது செய்தி ஈழத்தின் வாக்குகளால் நான் தோற்றுப்போனேன். தற்போது பிரதமர் ரணில் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்ற செய்தியை சிங்கள பத்திரிகைகள் தமிழர்களின் சுயாற்சியை ஏற்றுக்கொள்கிறேன் என்று செய்தி இட்டது இதனை பின்னர் பிரதமர் மறுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தருணங்களில் கிழக்கில் தமிழ் கூட்டமைப்பின் முதலமைச்சர் உருவாகுமாக இருந்தால் இரண்டு முதலமைச்சர்கள் ஊடாக வடக்கு கிழக்கில் தமிழ் கூட்டமைப்பு ஈழத்தை உருவாக்கி இருக்கிறது எனும் செய்தி தெற்கில் சொல்லப்படும் மேலும் வடக்கும் கிழக்கும் தமிழ் முதலைச்சர்களுடாக இணைக்கப்படப்போகின்றது என்ற பரபரப்பான சிங்களப்பீதியை ஏற்படுத்துகின்ற கோசம் சிங்கள மக்களை உசுப்பேற்றிவிடும் இச்செய்யற்பாடானது மைத்திரியின் நல்லாட்சி எனும் பொட்டலத்தில் விழுகின்ற அணுகுண்டாகவே மாறும்.

இப்போது முஸ்லிம் காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன? ஆளும் கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் செயற்படுகின்ற மைத்திரி அரசாங்கத்தோடு பேசி கிழக்கில் தற்போது இருக்கின்ற ஆளும் மாகாண ஆட்சி கட்டமைப்பை முதலமைச்சரை தன்வசமாக்கிக் கொண்டு மாகாண ஆட்சியை வழிநடாத்தி செல்லவேண்டும் ஏனெனில் கிழக்குமாகாண சபையில் அதிகமாக முஸ்லிம் உறுப்பினர்கள் காணப்படுவதும் இன்னொரு புதியதேர்தல் இடம்பெற்றாலும் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகரிக்கும் நிலமை தெரிகிறது ஆகவே தற்போது முஸ்லிம் முதமைச்சர் என்பது கிழக்கின் ஆட்சியில் முக்கிய கருப்பொருளாக மாறியிருப்பதுடன் இது தான் மைத்திரி ஆட்சியின் நல்லாட்சியின் வெளிப்பாடாகவும் தென்படப்போகிறது.

1 comment:

  1. முதலமைச்சர் ப்தவிக்குத் தமிழ்க்கூட்டமைப்பு ஏன் வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறது என்ற அதே கேழ்வியை முஸ்லிம் காங்கிரஸிடம் கேட்டால்....? முன்னர், தமிழ்க்கூட்டமைப்பு இப்பதவியை ஏற்குமாறு கோரியபோது அரசுடன் இணைந்நு கொண்டு மறுத்த முஸ்லிம் காங்கிரஸ் தற்போது ஏன் அதற்காக வ்ரிந்து கட்டிக் கொள்ள வேண்டும்? உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றவர்களுக்கும் ஏற்படலாம் என்பதை மறக்க வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.