Header Ads



மு.கா. ஸின் அமைதிக்கு காரணம், உறுப்பினர்களை கட்சியைவிட்டு பிரிந்து செல்லாமல் காப்பதே - றவூப் ஹக்கீம்


(எம்.ரீ.எம்.பர்ஹான்)

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஜனாதிபதித்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக நீண்ட அமைதியை மேற்கொண்டது தொடர்பாக மக்கள் பல விசனங்களை தெரித்து வந்தார்கள். இது தொடர்பாக இன்று சம்மாந்துறை விளினயடி சந்தியில் இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னால் அமைச்சருமான றவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் பொரும்பான்மை முஸ்லீம்களின் ஆதரவைப்பெற்ற கட்சியாகிய ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் நீண்ட அமைதிக்கு காரணம் கட்சி உறுப்பினர்களை கட்சியை விட்டு பிரிந்து செல்லாமல் காப்பதற்காக அமைந்தது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்

மக்களின் விடிவிற்க்hக தோற்றம் பெற்ற இக்கட்சி மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக முடிவெடுப்பது என்பது ஆபூர்வத்திலும் அபூர்வமாகும். இன்று அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் பற்றி தப்பான இனவாத கருத்துக்கள் விதைக்கப்படுவதாகவும் இது அரசாங்கத்தின் வங்குரோத்து அரசியலை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னால் சுகாதார அமைச்சருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் பாராளமண்ற உறுப்பினர்களான ஹரீஸ், பைசல் காசீம் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. Rauff Hakeem wanted to keep only it's MPCs and MPs with SLMC and not the Muslim voters with the SLMC, the leadership difference between Asroff and Hakeem is this. Asroff always with the Muslim voters, so whatever Asroff decides people were behind his decision, but Hakeem was always wants to please his party MPCs and MPs and not the grass root voters. Can you sack one MPC or MP for violating party discipline ? you cant ! why is this ? you are totally pleasing them not the voters. You have all the qualities to lead Muslim community, except grass root backing, please try to add that quality too and correct your leadership style. Didn't Asroff sack Segu Issadeen, one of the founders of SLMC, intelligent politician and a lawyer for violating discipline ? who is Baseer, Naseer, Mansoor did all of them passed grade 12 ? when they enter politics how their property worthiness? what is their knowledge capacity ? you are trying to bargain the entire Muslim community including the educated Muslims for the sake of these stupids. Please change your leadership style at least now.

    ReplyDelete

Powered by Blogger.