அப்பில் பழங்கள் உண்பதை மட்டுப்படுத்துங்கள் - இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அப்பில் பழங்களை, சந்தைகளில் இருந்து அகற்றும் நடவடிக்கைள் நாளை மறுதினத்துடன் நிறைவுறுத்தப்படவுள்ளன.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உப்புல் ரோஹன இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அப்பில் பழங்களில், உடலுக்கு பாதிப்பு ஏற்படும் பக்டீரியாக்கள் அடங்குவதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இனங் கண்டிருந்தது.
இதனையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இயன்றளவு, அப்பில் பழங்களை உண்பதை மட்டுப்படுத்துமாறும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உப்புல் ரோஹன கோரியுள்ளார்.
Post a Comment