இம்ரான்கான் விரட்டப்பட்டார் - பெற்றோர் எதிர்ப்பு
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பாகிஸ்தான், பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் புகுந்த வாதிகள், ஈவு இரக்கம் இல்லாமல், 142 மாணவர்களை சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து, பாக். அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பின்னர் தாக்குதலுக்கு உள்ளான பெஷாவர் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக இன்று இந்த பள்ளிக்கு பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவரான இம்ரான்கான் சென்றார். ஆனால், ஆவேசம் அடைந்த பெற்றோர், அவரை பள்ளிக்குள் நுழைய விடாமல் தடுத்து, விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Post a Comment