'அரசின் தோல்வி உறுதியானதால், இனவாதத்தை கருவியாக பயன்படுத்தி வெற்றியீட்ட முயற்சி' - சோபித தேரர்
அரசாங்கம் இனவாதத்தை கைவிட வேண்டுமென சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரர் கோரியுள்ளார்.
ஆளும் கட்சிக்கு தோல்வி உறுதியாகியுள்ள நிலையில், இனவாத்தை ஓர் கருவியாகப் பயன்படுத்தி வெற்றியீட்ட முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் வகையிலான தொழிற்சங்கக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியில் அமர்த்த எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்புக்களுடன் இணைந்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாங்கள் வெறுமனே மாற்றத்திற்காக முயலவில்லை, பாரிய புரட்சியில் ஈடுபட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment