அப்துல்லாவின் அஞ்சலி நிகழ்ச்சியில், ஈரான் வெளியுறவு அமைச்சர் பங்கேற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா (90) நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரது இறுதி சடங்கு ரியாத்தில் நடந்தது.
அதில் வளைகுடா நாடுகளை சேர்ந்த ஆட்சியாளர்கள், துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து நேற்று ரியாத்தில் மன்னர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கலந்து கொண்டார். மேலும் பிரான்ஸ் அதிபர் பிரான் கோயிஸ் ஹேலண்டே, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்கன், இந்தோனேசியா துணை அதிபர் ஜுகப்கல்லா, ஸ்பெயின் மன்னர் 4–து பெலிப், ஈராக் அதிபர் பியாத் மசூம், பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ், மலேசிய பிரதமர் நஷிப் ரஷாக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சவுதி அரேபியாவின் பரம எதிரியாக கருதப்படும் ஈரான் நாட்டின் பிரதிநிதியும் பங்கேற்றார்.
மன்னர் அஞ்சலி நிகழ்ச்சியில் ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஷரீப் பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Post a Comment