இத்தாலியில் அதிகரிக்கும் 'கன்னி'யாஸ்திரிகளின் பிரசவங்கள்..!
இத்தாலியில் கன்னியாஸ்திரி மடத்தில் தங்கியிருந்த ஒரு பெண், ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு இத்தாலியின் லி மார்ச்சே பிராந்தியத்தைச் சேர்ந்த மாக்கெரெட்டா நகரில் உள்ள ஒரு கன்னியாஸ்திரிகள் மடத்தில் தங்கியிருந்த சுமார் 31 வயது மதிக்கத்தக்க பெண் கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்து, திடீரென மயங்கி விழுந்தார்.
அங்கிருந்த இதர கன்னியாஸ்திரிகள் அளித்த தகவலையடுத்து, விரைந்து வந்த ஆம்புலன்ஸ் அவரை சான் செவரினோ பகுதியில் உள்ள பார்ட்டோலோமியோ யூஸ்ட்டாசியோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு விரைந்தது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த கன்னியாஸ்திரி துடிப்பது வயிற்று வலியால் அல்ல.., கடுமையான பிரசவ வலியால் என்பதை உணர்ந்துக் கொண்டனர்.
இதனையடுத்து, உடனடியாக பிரசவ வார்டுக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இவ்வளவு காலமாக நான் கர்ப்பமாக இருந்தேன் என்பதே எனக்கு தெரியாது என சமீபத்தில் தாயான அந்தப் பெண் கூறுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நல்ல ஆரோக்கியத்துடன் துருதுருவென இருக்கும் அந்த ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துக் கொள்ள அந்த கன்னியாஸ்திரியின் சகோதரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோல், கடந்த ஆண்டும் இத்தாலியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து, அதற்கு போப் பிரான்சிஸ் என்று பெயரிட்டதும், இந்த குழந்தையை பெற்றதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவன் கடவுள் கொடுத்த பரிசு. ஒரு கன்னியாஸ்திரியாக இருப்பதைவிட அவனுக்கு தாயாக இருப்பதில் நான் ஆனந்தப்படுகிறேன் என்று குறிப்பிட்டிருந்ததும் நினைவிருக்கலாம்.
Post a Comment