Header Ads



முஸ்லிம் வாக்காளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஓரு வேண்டுகோள்!

(Amanulla Kamaldin)

'உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் அதை அவர் தமது கையால் மாற்றி விடவும் (கையால் மாற்றும்) சக்தி இல்லையெனில் நாவால் அதை மாற்றி விடவும். அதற்கும் சக்தி இல்லையென்றால் உள்ளத்தால் அது தீயதென அறிந்து கொள்ளவும்.(உள்ளத்தில் அத்தீமையைப் பற்றி கவலை கொள்ளவும்) இது ஈமானுடைய பலகீனமான தரமாகும். (முஸ்லிம்)

இலங்கையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை மக்களுடன் சுமுகமாக ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். அன்மையில் 'பொது பல சேன'என்ற தீவிரவாத அமைப்பு இரகசியமாகவும் பகிரங்கமாகவும் பெரும்பான்மை மக்கள் மனதில் துவேசத்தை வளர்த்து இனக்கலவரத்தை தூண்டி மத வெறியால் மற்ற மதங்களை  கொச்சைப்படுத்தி மத வழிபாட்டு நிலையங்களை உடைத்து முஸ்லிம்களின் உடமைகளை சேதப்படுத்தி பொருற்களை சூரையாடி உயிர்களைக் கொண்ற நூற்றுக்கணக்கான  மனக்கசப்பான நிகழ்வுகள்  நாம்  அனைவரும் அறிந்த விடயமே.

அரசியல்வாதிகள,; புத்தி ஜீவிகள்,மார்க்க மேதைகள்,  புலம் பெயர்ந்து வாழும் மக்கள், பொது மக்கள்  அனைவரும் நாட்டில் இனங்களிடையே பரஸ்பர நல்லுறவைக் குழப்பி நிம்மதிக்கு கலங்கம் விளைவிக்கும் இத் தீவிரவாத  'பொது பல சேன'வை கைது செய்து எச்சரிக்குமாறு கோரியும்  இது வரை அதைக்கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ  முயற்சிக்காது கை கட்டிப்பார்த்துக் கொண்டிருப்பது கவலைக்குறிய விடயமாகும்.

இலங்கை முஸ்லிம்கள் ஆயத பலமோ அதிகார பலமோ இல்லாமல் செய்வதறியாது ஈமான் எனும் இறைவிசுவாச பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு தன் இறைவனிடமே முறையிட்டனர். 'பொது பல சேன' சிறுபான்மை மக்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தது. மிகப் பெரிய சூழ்ச்சிகாரனாகிய அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து வாக்கு என்ற ஆயுதத்தை தந்து சந்தர்பத்தை அளித்திருக்கிறான.; எனவே ஒவ்வோரு முஸ்லிமும் பொது பல சேன' இந்த தீவிரவாத  இயக்கத்துக்கு  எதிராக வாக்களிப்பது கட்டாயக் கடமையாகும்.

இதற்கு மாற்றமாக ஒரு முஸ்லிம் தமது அமைச்சர் பதவியையோ, கட்சியையோ,சுய இலாபங்களையோ, சுகபோகங்களையோ, அரசின் அச்சுறுத்தல்களையோ அடாவடித்தனங்களையோ பயந்து இஸ்லாம் மார்க்கத்தை அழித்தொழிக்க சூழுறை கொண்டிருக்கும் 'பொது பல சேன'வுக்கு ஆதரவாக வாக்களித்தால் அவர்கள் செய்யும் அட்டகாசங்களின் பங்குதாரர்களாக கியாமத்தில் இருப்பதுடன் அல்லாஹ்விடம் இந்த பாவத்துக்கு பதில் கூற வேண்டும்.

நாளை கியாமத்ததில் அல்லாஹ்வுடைய சந்நிதானத்தில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் 'என்னுடைய பள்ளிகள் உடைக்கப்பட்ட போது, என்னுடைய திருக் குர்ஆன் எரிக்கப்பட்ட போது, என்னுடைய மார்கத்தின் சட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட போது, முஸ்லிம்களின் உடமைகள் சூறையாடப்பட்ட போது, என்னுடைய மார்க்கம் கேவலப்படுத்தப்பட்ட போது நீ என்ன செய்தாய்? என்று கேற்கப்படும் போது என்ன பதில் சொல்ல முடியும்.

முஸ்லிம்கள் ஓர் உடலுக்கு ஒப்பானவர்கள. காலில் முள் குத்திய போது கண்; கண்ணீர் வடிப்பது போல நாவு புலம்புவது போல தலை வலிப்பது  போல தம்புள்ளையிலோ, அளுத்கமையிலோ,அநுராதபுரத்திலோ நாட்டில் எந்தப் பகுதியில் யாருக்கு என்ன அநியாயம் நடந்தாலும் தனக்கு நடந்தது போன்று நினைத்து செயல்பட வேண்டும்.

ஓவ்வொரு முஸ்லிமும் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாக்குரிமை என்ற அமானிதத்தை இன விரோத சக்திகளுக்கு எதிராக செயல்படுவார் என்று கருதும் வேற்பாளருக்கு  வாக்களிப்பது கடமை என்று பல்வேறு முஸ்லிம் நிருவனங்கள் வலியுருத்தியிருக்கின்றன.

மேலும் ஐக்கிய இராச்சிய பூகோள அழைப்புப் பணியின் உறுப்பினரான அமானுல்லா கமால்தீன் அவர்கள் முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாகப் பிரதிநிதிப்படுத்தும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கட்சி பேதங்களை மறந்து முஸ்லிம்களின் பொதுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இலக்கை நோக்கி ஒற்றுமையுடனும் தூர நோக்குடனும் செயல்படுவதோடு பின்வரும் விடயங்களை ஊர்ஜிதப்படித்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொனள்கிறார்.

* அனைத்து இன மக்களும் சமாதானமாகவும் ஓறறுமையாகவும் வாழும் நிலையை உருவாக்க வேண்டும்

* சிறுபாண்மை இனப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்

* இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை இனத்துக்கும் எதிரான  மதவாத வன்முறைகளுக்கு முடிவு காண வேண்டும்

* சகல இன மக்களும் தமது மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும்

* அரசியலில் முஸ்லிம்களின் விகிதாசாரத்துவம் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்

* வன்முறைகளில் ஈடுபட்டவர்களையும்  இனவாதிகளையும் அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்களையும் இனங்கண்டு நீதியின்; முன் நிறுத்த வேண்டும்

* பள்ளிவாசல்களதும் மற்றும் மத நிருவணங்களதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

* பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடமைகளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.

1 comment:

Powered by Blogger.