சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்காத, மகத்தான தலைவர் மஹிந்த ராஜபக்ஷ
இன்று நாம் அனைவரும் பாதுகாப்பானதும்,அபிவிருத்தி நிறைந்ததுமான ஒரு வளமான தேசத்தில் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். முப்பது வருடங்கள் யுத்தம் எனும் கொடிய அரக்கனால் எமது தாய் நாடு நாசம் செய்யப்பட்டு பாழ் வீடு போல சோகத்துடன் காட்சியளித்தது.
ஆனால், இன்றுகளில் எமது நாடு பாலும் தேனும் பொங்கி வழிகிற குதுகலம் குதுகலிக்கும் நாடாக சர்வதேசங்களில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் விரும்பிய உன்னதமான சமாதானத்தின் ஊடாக நாடும் நாங்களும் வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
நாட்டு மக்களின் இந்த நிம்மதியான மகிழ்ச்சிக்கும், சமுதாய வெற்றிக்கும், அபிவிருத்தி எனும் அற்புத மாற்றத்திற்கும், மக்கள் வாழ்வியலின் உயர் நிலைக்கு உரமாகி உன்னத விதை நட்டவர் யார்? தேசத்தின் எழுச்சிக்கு உந்து சக்தியானவர் யார்? நாட்டைக் காத்த காருண்யமிக்க காவலன் யார்?
சிறு மழலையிடம் இருந்தும் இந்த கேள்விக்கான பதில் கிடைக்கும். ஆம், 30 வருடங்கள் கவலை தோய்ந்த முகத்துடன் விரக்தியுற்றிருந்த இலங்கை மாதாவின் அன்றாட அச்சங்களை, துன்ப துயரங்களை,பசி பட்டினியை முளையில் கிள்ளியெறிந்த மஹிந்த எனும் நாமமே எம் விழிகளும் செவிகளும் தரிசிக்கும் உன்னத விடையாகும்.
பயங்கரவாதிகளாலும்,இனவாத சக்திகளாலும் கூறு போடப்பட்ட எமது தாய் நாட்டை ஒரு குடையின் கீழ் திரளச் செய்து தேசத்தின் மகிழ்ச்சிக்கு வித்திட்டவர் மஹிந்த ராஜபக்ஷ அவ்ர்களேயாகும். மக்களின் மன உணர்வுகளை நன்றாக புரிந்து, மஹிந்த சிந்தனை எனும் எண்ணக் கருவில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுவிய ஆசியாவின் ஆச்சரியமிக்க ஓர் ஆளுமை மிக்க தலைவராக மஹிந்த ராஜபக்ஷ திகழ்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முப்படையினரின் உதவியுடன் நாட்டில் கொடிய யுத்தத்தை வெற்றி பெற்றிருக்காவிட்டால், இன்று நாம் அனுபவிக்கும் நிம்மதியும் சந்தோசமும் கேள்விக் குறியாயிருக்கும். நல்லாட்சி மலர்ந்திருக்காது.
மரணபயத்துடன் கூடிய ஒரு தேசத்தில் தான் 2009 மே மாதம் 18 க்கு முதல் நாம் வாழ்ந்து வந்தோம். ஆனால், இன்று பயமின்றிய ஒரு தேசத்தில் மகிழ்ச்சியாய் நாம் அனைவரும் சீவிக்கிறோம். இந்த மாற்றம் ஒன்றுதான் எமது தேசத்தின் துரித வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆணிவேரானது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
இன்று நாட்டை மறுபடியும் இருண்ட யுகத்திற்குள் தள்ள, கூட்டு சேர்ந்திருக்கும் கும்பல்களின் உண்மை முகத்தை நாம் ஒரு தரம் திரும்பி பார்க்க வேண்டும். அவர்களின் அரசியல் முகங்கள் கோரமானதும் அழுக்கு நிறைந்ததுமாகும் என்பதை பொது மக்கள் நன்கு உணர வேண்டும்.
நாட்டில் யுத்தம் ஒன்றை இடைவிடாமல் நடாத்தி அதில் அரசியல் லாபம் அனுபவித்தவர்கள் யார்? நாட்டை காட்டிக் கொடுத்தவர்கள் யார்? நாட்டில் இனவாதத் தீயை பற்ற வைத்து அதில் குளிர்காய்ந்தவர்கள் யார் யார்..? என்பதையெல்லாம் மக்கள் மறந்து போனாலும், வரலாறுகள் ஒரு போதும் மறந்து விடாது.
இன்று நாட்டிற்குள் பிளவை ஏற்படுத்த அணி திரண்டிருக்கும் பொது வேட்பாளர் தலைமையிலான எதிரணியினரின் கடந்த காலங்களை நாம் சற்று திரும்பி பார்க்க வேண்டும். புலிப்பயங்கரவாதம் நாட்டில் கோரத் தாண்டவமாட காரணமானவர்கள் ஐ.தே.க. வினர் என்பது வரலாறு உணர்த்தும் உண்மையாகும்.
அவர்கள் நாட்டில் ஏற்படுத்திய வடுக்கள் இன்றும் பசுமையாய் காட்சி தருகின்றன. இலங்கையில் நிகழ்ந்த இத்தனை கோரமான யுத்த அழிவுகளுக்கும் ஐ.தே.க. வின் சீரற்ற அரசியல் போக்கு மூலகாரணமாய் அமைந்ததை யாரும் மறுக்கவும், மறந்து விடவும் முடியாது.
அது மாத்திரமல்ல, இன்று ரணிலுடனும் இதர அவர்களது சகாக்களுடனும் கூட்டு சேர்ந்திருக்கும் சந்திரிகா அம்மையாரின் காலத்திலும் எமது நாடு இனவாதத் தீயில் பற்றி எரிந்ததை யாரும் மறந்து விடக் கூடாது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்க்கமான போரைத் தவிர வேறெந்த மிகக் கடினமான பதட்ட நிலைமையும் நாட்டில் இருக்கவில்லை.
ஐ.தே.க. , மற்றும் சந்திரிக்கா ஆட்சியில் நாட்டில் மிக மோசமான இன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சிறுபான்மையினருக்கு விடிவை பெற்றுத் தருவதாக இன்று அரசியல் மேடைகளில் கூச்சலிடும் இவர்களின் கடந்த கால தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன வன்முறை நடவடிக்கைகளை காலத்தின் தேவை கருதி இங்கே பட்டியலிடுகிறேன்.
#1915 இல் ஏற்பட்ட சிங்கள-முஸ்லிம் கலவரம்
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது.
#1958 ஏற்பட்ட கலவரம்
58 கலவரம் என அறியப்பட்ட இக்கலவரம் சிங்கள் தமிழ் இனத்தவரிடையே பொலனறுவை கொழும்புப் பகுதிகளில் ஏற்பட்டது.
#ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் 1976 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி சீருடை அணியாமல் வந்த துப்பாக்கி ஏந்திய பொலிசார் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்குள் வைத்து அப்பாவிகளான ஒன்பது முஸ்லிம்களை சுட்டு மரணிக்கச் செய்தனர். அதுமட்டுமன்றி கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் பொலிசார் மற்றும் சிங்கள இனவாதிகளால் சேதமாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு முஸ்லிம்களின் பொருளாதாரம் வேரோடு வெட்டிச் சாய்க்கப்பட்டது.
1976 ம் ஆண்டின் பொலிஸ் படுகொலைகள் தற்செயலாகவோ திடீரென ஏற்பட்டதோ அல்ல.அன்றைய ஆட்சியின் உயர்பீடத்தின் அங்கீகாரத்துடன் திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டதாகும். அன்றைய ஆட்சியாளர்கள் இந்த அக்கிரமத்தை கை கட்டி வேடிக்கை பார்த்தனர். ஜனநாயகம் பேசும் அரசியல் வாதிகள் அன்று வாய் மூடி மௌனமாயினர்.
#1977 ஏற்பட்ட கலவரம்
1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தப் பின்னர் தமிழர்களை இலக்கு வைத்து இக்கலவரம் நடத்தப்பட்டது.
#1983 கலவரம்
கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் என பரவலாக அறியப்பட்டது. இதுவே தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பெரிய கலவரமாக கருதப்படுகிறது. இந்த க்லவரம் முழுக்க முழுக்க ஐ.தே.க. ஆட்சியில் நடந்த உச்சக்கட்ட இன வன்முறையாகும்.
#2001 இல் ஏற்பட்ட மாவனல்லை கலவரம்]
2001 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் மாவனல்லை நகரிலும் அதற்கு அண்மையில் இருந்த பகுதிகளிலும் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்டக் கலவரமாகும். இதில் முஸ்லிம்களுக்கு அதிக உயிரிழப்புகளும், பாரிய பொருளாதார நஷ்டங்களும் ஏற்பட்டன.
அன்று மாவனல்லையில் நடைபெற்ற அசம்பாவிதங்களுக்கு சந்திரிக்கா அம்மையாரினால் உரிய சட்ட நடவடிக்கைகளோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்ட ஈட்டு தொகைகளோ வழங்க முடியவில்லை. ஆனால், இன்று முஸ்லிம்களுக்காக சந்திரிக்கா அம்மையார் நீலிக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாய் இருக்கிறது.
இது போல, ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த துன்ப துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.1990 இல் பயங்கரவாதிகளால் யாழ்ப்பாண முஸ்லிம்கள் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் பயங்கரவாதிகளால் மிக மோசமான இன வன்முறையும், மனிதாபிமானம் இல்லாத இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையும் இதுவாகும்.
அன்றைய ஐ.தே.க. ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களும், மக்களை பாதுகாக்க வேண்டிய முப்படையினரும் இந்த கொடுரமான இன சுத்திகரிப்பை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். இலங்கை முஸ்லிம்களின் துயரம் மிக்க கறை படிந்த பதிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
மேலும்,1990ஆம் ஆண்டு புனித மக்கா சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு நாடு திரும்பி, சொந்த ஊர்களை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 160 முஸ்லிம் ஹாஜிகள் குருக்கள் மடம் எனும் ஊரில் வைத்து வழி மறிக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். மனித விழுமியங்களை அறவே மீறிய இந்த கொலைகளை செய்தது யார்? கொடிய புலிப் பயங்கரவாதிகள். அந்த கொடியவர்களின் கொட்டத்தை அடக்கியவர், எமது தேசத்தை பாதுகாத்த உன்னத தலைவன் மஹிந்த ராஜபக்ஷ அவர்களகும்.
ஐ,தே.க. ஆட்சியாளர்கள், சந்திரிக்கா, ரணில் ஆகிய தலைவர்கள் முஸ்லிம், தமிழ் மக்களுக்கு எதிரான பயங்கரவாத வன்முறைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். ஆனால், எமது ஆளுமை மிக்க தேசியத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கொடிய யுத்தத்தையும், அதனை முன்னெடுத்த புலிகளையும் கூண்டோடு ஒழித்தார். அதற்கான, மனத்திடமும், தைரியமும் ,நாட்டின் மீதான அளப்பரிய நேசமும், மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் தாராளமாய் இருந்தன.
எனவே, எதிர்வரும் காலங்களிலும் சிறுபான்மையினர்- குறிப்பாக முஸ்லிம்கள் நிம்மதியாய், சுபீட்சமாய் வாழ மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஏகோபித்த தீர்மானத்துடன்ஆதரிக்க வேண்டும். நாட்டில் இன்னுமொரு கறை படிந்த யுகத்தை உருவாக்கத் துடிக்கும் சுய நல அரசியல் வாதிகளின் சதி வலைகளில் சிக்கி, பல தியாகங்களின் ஊடாக நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தையும் நிம்மதியையும் இழந்து விடக் கூடாது என்பதே எனதும், நாட்டில் அமைதியை நேசிக்கும் அனைவரதும் ஆத்மார்த்தமான பிரார்த்தனையாகும்.
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
கடந்த காலங்களில் நடந்த வன்முறைகள் பற்றி மட்டும் விபரமாக எழுதயவருக்கு மஹிந்த ஆட்சியில் உடைக்கப்பட்ட பள்ளிகள் உடைக்கப்பட்ட முஸ்லிம்களின் க டைகள் அபாயா ஹலால் பிரச்சினைகளை பட்டியலிட மறந்து போய்விட்டாரா அல்லது மறைத்து விட்டாரா
ReplyDeleteYou are a Munafiq Living among Muslims.
ReplyDeleteYous seems not a sheikh rather a SHAKE only,
ReplyDeleteAllah is enough for you, for directing people to vote MR, who still keep silent for the BBS action, which destroyed around 30 masjids and brunt Aluthgama.
Yaa Allah Let these supporters of MR, who allowed the burning of Your Masjids by BBS, turn to correct path, if not let them raise the same MR groups on the day of Judgement day.
If we compare past and mr govt past?wich is worst?past one or present one?moulana sab pls judge your self.pls comments everybody
ReplyDelete