Header Ads



ராஜபக்ஸ சகோதரர்களுக்கு நெருக்கடி - யுத்தத்தின் பின் மீட்கப்பட்ட உடமைகள் தொடர்பில் விசாரணை

யுத்தத்தின் பின்னர் வடக்கில் இருந்து மீட்கப்பட்ட உடமைகள் தொடர்பில் ஆராய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று 20-01-2015 கூடிய, தேசிய நிறைவேற்றுப் பேரவையின் கூட்டத்தில் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

யுத்தின் பின்னர் வடக்கு பகுதியில் இருந்து வாகனங்கள், சொத்துக்கள் மற்றும் தங்க நகைகள் என்பன பெருமளவில் மீட்கப்பட்டன.

எனினும் அவற்றிற்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியப்படுத்தவில்லை.

இந்த நிலையில், புதிய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள தேசிய நிறைவேற்றுப் பேரவையினால் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, றிசாத் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, அநுரகுமார திசாநாயக்கா, சம்பந்தன், சரத் பொன்சேக்கா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.