ஹெலஉறுமய எங்கள் கோரிக்கைகளை செவிமடுக்கக்கூடியவர்கள் - ஹசன் அலி
-மு.இ.உமர் அலி-
நிந்தவூர் பிரதான வீதியில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக்கூடத்தில் முஸ்லீம் காங்கிரசின் பொதுச்செயலாளர் எம்.ரி.ஹசனலி உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டம் 1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இருந்து அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்டதில் இருந்து இப்பிராந்தியத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் முஸ்லீம் மக்களினை பல்வேறு வகையில் இம்மாவட்டத்தின் பெரும்பான்மை இன ஆட்சியாளர்கள் வஞ்சித்துள்ளனர். அப்போதிருந்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவற்றை தட்டிக்கேட்கவில்லை, முஸ்லீம் காங்கிரஸ் இந்த அநீதிகளை ஆரம்பகாலத்திலிருந்தே தட்டிக்கேட்டு வருகின்றது, முஸ்லீம்களின் காணிகளை கபளீகரம் செய்கின்ற இந்த நிலையை அடியோடு இல்லாமல் செய்வதற்காகவே நாங்கள் கரையோர மாவட்டத்தினை கோரி நிற்கின்றோம், நாங்கள் தனிமாவட்டம் பிரித்துக்கேட்கவில்லை, தமில்பெசுபவர்களுக்கான நிருவாக மாவட்டத்தினையே கேட்கின்றோம், அது நியாயமற்றது என்று யாராலும் மறுத்தொதுக்க முடியாது,இந்த மாவட்டத்தின் கரையோரத்தின் கடைசி தமிழ்பேசும் குடிமகன் வாழும் வரை இந்த கோரிக்கை முன்னெடுத்துச்செலப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்,
இலங்கையில் காணிச்சட்டங்கள் அனைத்தும் இந்நாட்டின் சிறுபான்மையினரின்மேல் திணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தபடுகின்றன, காணிப் பகிர்ந்தளிப்பின் போதும்,பிற வீடமைப்புத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும்போதும் அச்சட்டம் முஸ்லீம் பிரதேசங்களில் பெரும்பான்மையினருக்கு சார்பாகவே செயல்படுத்தப்படுகின்றது,ஆனால் பெரும்பான்மை இனத்தவர் வாழும் பிரதேசங்களில் காணி மற்றும் இடப்பகிர்வுகள் நடைபெறும்போது இச்சட்டம் அமுலுக்கு வருவதுமில்லை,முஸ்லீம்களுக்கு எந்தக்காணிகளும் வளங்கப்படுவதுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்,மேலும் அக்கரைப்பற்றில் அமைக்கப்பட்டு இன்னும் மக்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் இதற்கு சிறந்த உதாரணமாகும் என்றும் கூறினார்.
காலத்துக்குக்காலம் ஏற்படுத்தப்பட்ட அனைத்து எல்லைச் சீர்த்திருத்தங்களும், பிரதேச செயலக எல்லை மாற்றங்களும் முஸ்லீம்களின் காணிகளை பெரும்பான்மையினரின் பிரதேச எல்லைகளுக்குள் இழுத்துக்கொள்ளும் முகமாகவே செயற்படுத்தப்பட்டன. மேலும் அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயமும் காலத்துக்கு காலம் அங்கு நியமிக்கப்படும் பெரும்பான்மை இன அரசாங்க அதிபர்களும் இம்மாவட்டத்தில் வசிக்கும் தமிழ்பேசும் மக்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை,சிங்கள பிரதேசங்களுக்கு வளங்கப்படபின்னர் எஞ்சியவற்றை எறிபவர்களாகவே செயற்பட்டார்கள்,பொத்துவில் பிரதேசத்தில் முச்லீம்களுக்குச்சொந்தமான காணிகளை வனபரிபாலன தினைக்கலத்துக்குள் உள்வான்கியிருக்கின்றார்கள்,சம்மாந்துறை பிரதேச சபைக்கு சொந்தமாயிருந்த ஐநூறு ஏக்கர் காணிகளை கடந்தகாலத்தில் அம்பாறையுடன் இணைத்து அங்கு இராணுவத்தினருக்கான வீடமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்கள், இதுபோன்ற இன்னும் எத்தனையோ சம்பவங்கள், சதிகள் இருக்கின்றன,
இவற்றிலிருந்து எமது மக்களை காப்பாற்றவும், எஞ்சியுள்ள வளங்களை காக்கவுமே நாங்கள் கடந்த மாகான சபைத் தேர்தலைத்தொடர்ந்து எட்டு நிபந்தனைகளுடன் அரசுடன் இணைந்தோம்,ஆனால் அரசு கபட நாடகமாடி இன்று நாளை என்று காலத்தைக்கடத்தி இழுத்தடித்து கட்சியையும் மக்களையும் ஏமாற்றியது, சில சந்தர்ப்பங்களில் கட்சியை உடைப்பதற்கும் இயலுமான சதிகளை செய்தது. ஆனால் கட்சி சோரம்போய்விடவில்லை.
கட்சி அரசுடன் இருந்து பிரிவதற்கு முன்னர்கூட மணிக்கணக்கில் காலக்கேடுதந்து கடைசியில் கலை வாரியது.
இந்த அராஜக ஆட்சியை இல்லாமல்செய்து எமக்கெதிரான செயல்பாடுகளின் வேகத்தைத்தணிப்பதர்க்காகவே நாங்கள் இம்முறை எதுவித ஒப்பந்தமுமின்றி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குகின்றோம்,மக்களாகிய நீங்கள் எதை விரும்பினீர்களோ அதற்கேற்பவே நாங்கள் இம்முறை இம்முடிவை எடுத்திருக்கின்றோம். அந்த அணியில் ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாத அமைப்புக்கள் இருந்தாலும் அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளை செவிமடுக்கக்கூடியவர்கள்,அவர்களுடன் பேசலாம்,அவர்கள்,புத்திஜீவிகள் ,பொதுபலசெனா போன்று மிருகத்தனமாக கூச்சலிட்டு பன்சலைளில் கூட்டம் கூட்டி முஸ்லீம்களை அழிக்க திட்டம் தீட்டுபவர்களல்ல.
ஜனாதிபதியும் அவர்களது அணியினரும் கூறுவது போன்று நாங்கள் கிழக்கினை பிரித்துக்கேத்கவில்லை எங்களுக்கு அது தேவையுமில்லை.
இம்முறை இத்தேர்தலில் வாக்களிப்பது முஸ்லீம்களுக்கு மிகவும் முக்கியமான கடமையாகும், எனவே எதிர்வரும் எட்டாம் திகதி அனைவரும் தவறாது உங்களது உரிமையான வாக்குகளை உதாசீனம் செய்யாமல் அன்னம் சின்னத்திற்கு அளித்து மைத்திரியின் வெற்றியை உறுதிப்படுத்துமாறு வேண்டுகின்றேன் என்றார்.
Post a Comment