முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்த மைத்திரி, கிழக்குக்கு முஸ்லிம் முதலமைச்சர் என்பதிலும் உறுதி
-Rauf Hazeer-
இன்று மு.கா வின் மக்கள் பிரதிநிதிகள் , உயர்பீட உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழு ஒன்று தலைவர் ரவூப் ஹகீம் தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்தது.
ஜனாதிபதிக்கு அவரின் வெற்றிக்கான வாழ்த்துக்களை கட்சியின் சார்பில் தலைவர் தெரிவித்துக்கொண்டதுடன் முஸ்லிம் மக்கள் இலங்கையின் வரலாற்றில் கடந்தகாலத்திலும் , இனிமேல் எதிர்காலத்திலும் எதிபார்த்திருக்க முடியாத அளவு மிகப்பெருன்பான்மையாக ஒருவரை ஆதரித்து வாக்களித்திருப்பது பற்றி குறிப்பிட்டார்.
ஜனாதிபதியும் மிகவும் சந்தோசத்துடன் முகம் மலர்ந்து தன நன்றிகளை முஸ்லிம் மக்களுக்குத் தெரிவித்துக்கொண்டார் . தொடர்ந்து பேசிய தலைவர் அவர்கள் அந்த அளவு மிகப்பெரும்பான்மையினர் ஏன் உங்களையே ஆதரித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று குறிப்பிட்டபோது ஜனாதிபதிக்கு அது புரிந்ததென்பதை அவரின் மலர்ந்த முகத்தில் நெளிந்த புன்சிரிப்பு உணர்த்தியது. முஸ்லிம் காங்கிரஸ் கடைசி இரண்டு வாரங்களிலேயே உங்களுக்கான பிரச்சாரப் பணிகளில் இறங்கவேண்டி ஏற்பட்டாலும் , அது மிகவும் உளச்சுத்தியுடனான அர்ப்பணிப்பு கலந்ததாக இருந்ததாகவும் தலைவர் அங்கு ஜனாதிபதியிடம் கூறினார் .
100 நாட்கள் வேலைத்திட்டத்தின் முக்கிய கருப்பொருளான " நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை மாற்றி அமைத்தல் " என்கிற விடயத்தில் முஸ்லிம் சமுகத்தின் மட்டுமல்லாது முழுத் தேசியத்தினதும் நலன்கள் பற்றிய சில விடயங்களை கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மேயருமான நிசாம் காரியப்பர் அவர்கள் முன்வைப்பார்கள் என்று தலைவர் குறிப்பிட்டதன் பிரகாரம் காரியப்பர் அவர்கள் முக்கிய பாத்திரமான நிறைவேற்று முறைமையின் நியாய , அநியாய , நலன்கள் , பாதிப்புகள் பற்றிக் குறிப்பிட்டு மிகவும் நிதானமாக அதனை நகர்த்தவேண்டியதன் அவசியம் பற்றி விளக்கினார் .
ஜனாதிபதி அவர்கள் அதிகம் சந்தோசமான ( குஷி ) நிலையில் , மிகவும் சரளமான பாஷையில் மனம் திறந்து அளவளாவினார் . நிறைவேற்று முறையை நீக்குவதில் உள்ள பாதகங்கள் பாதிக்காத வகையில் கவனமாக அது கையாலப்படுவதன் அவசியத்தை தான் உணர்ந்துள்ளதாகவும் , எவ்வாறேனும் அரசு , எதிர்க்கட்சிகள் என்பனவற்றை அனுசரித்து அவர்களின் ஆதரவுடன் அதனை செய்தேயாகவேண்டியுள்ளதேன்பதை அவர் விளக்கியதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னும் இதுபோன்ற ஒரு தேசிய அரசுடன் இரண்டு வருடங்களாவது நகர முடியுமாயின் மிக வசதியாக நிறைய விடயங்க்களை சாதித்துக்கொள்ள முடியுமாயிருக்கும் என்றும் சொன்னார் .
இன்றைய அவரின் உரையை அவர் தொடங்கும் போதே " கிழக்குமாகான முதலமைச்சரை பிந்திய அரைப்பகுதிக்கு வழங்குவதென்கிற முன்னைய அரசின் முடிவில் தான் இன்றும் உறுதியாக உள்ளேன் " என்று சொன்னது இன்றைய சந்திப்பின் மிக சந்தோசமான நிகழ்வாகும் .
நான் அந்த அதிக சந்தோசம் தரும் செய்திக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன் . ஆமீன்
Post a Comment