சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதாரியின் குமுறல் - அதிகாரிகள் கவனிப்பார்களா..?
சுனாமியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஊழல்களும்
26.12.2004 ஆழிப்பேரலை காரணாமாக மருதமுனை மண்ணில் அழிவுகள் அதிகமாகவே காணப்பட்டது இது அனைருக்கும் தெரிந்த விடயமே அனால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி யாவரும் அறியாத விடயமே!!
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு தன் வீடு தன்னுடைய பொருளாதாரம் உடமை தனது 13 குழந்தை உட்பட அனைத்தையும் இழந்து அநாதரவாக உறவினர்களுடன் தனது வாழ்க்கையை கழித்து பின் சில நிறுவனங்கள் மூலம் சீலை வீடுகள் வழங்கப்பட்டு அதில் 4 வருடங்கள் தனது வாழ்க்கையை கழித்து பின் சில வெளிநாட்டு உறவினர்களினால் நன்கொடையாக பணம் பெற்று அதன் மூலம் ஒரு சிறு காணித் துண்டை பெற்று பிரான்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் ஒரு வீடை கட்டினேன் வீடு முழுமை பெறாத நிலையில் அந் நிறுவனம் தனது கால எல்லையை முடிந்த நிலையில் அவர்கள் நாடு திரும்பினார்கள் வீடு கட்டுவதற்க்கு போறுப்பளிக்கப்பட்டவர்களும் வீட்டை கட்டி முடித்து தராமல் சென்று விட்டனர் சுனாமியால் 65 மீட்டருக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போதைய அரசாங்கம் 2005ல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா Rs 250.000 கொடுப்பதற்க்காக அறிவித்தது.
இதனை பெற்றுத்தருவதாக கூறி எங்களிடம் எங்களது கிராம நிலதாரி கையொப்பம் கேட்டு நாங்களும் கையோப்பமிட்டோம் இப் பணத்தை நம்பி நான் மறுபாடியும் உறவினர்களிடம் கடன் பெற்று எனது வீட்டை முழுமையாக கட்டி முடித்தேன் அனால் ஓரிரு மாதங்களுக்கு பிறகு அரசாங்கம் அறிவித்த அந்த பணம் எங்களுக்கு அரசாங்கத்தால் தரப்படவில்லை என எங்களது கிராம நிலதாரி மற்றும் AGA கூறினார்கள் அனால் பணம் கொடுக்கப்பட்டதட்க்கான ஆதாரம் என்னிடம் கையிறுப்பில் உள்ளது எனது வறுமையின் காரணாமாக நான் எனது இருப்பிடத்தை விற்று அதன் மூலம் எனது கடன்களை செலுத்தி தற்ப்பொழுது எனது உறவினர்களுடன் நான் சொந்த வீடு இல்லாமல் வசித்து வருகிறேன்.
ஆனால் எங்களுக்காக மருதமுனையி மெட்டு வட்டையில் 178 வீடுகள் கட்டப்பட்டு அதில் 100 வீடுகள் சுனாமியால் பாதிக்கப்படாதவர்களுக்கும் கூட வழங்கப்பட்டது அனால் சுனாமியில் நேரடியாக பாதிக்கப்பட்ட எனக்கு எந்த வித நஷ்ட்ட ஈடோ அல்லது வீடோ இதுவரை அரசாங்கத்தால் கிடைக்க வில்லை என்னைப் போல் எனக்குத் தெரிந்து இன்னும் 23 குடும்பங்களும் எனக்குத் தெரியாமல் இன்னும் சில குடும்பங்களும் சில குடும்பங்களும் இருக்கின்றனர்
65 மீட்டர் தான் என்னைப்போல் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி 65 மீட்டர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டப்பட்ட வீடு தரமற்ற வீடாக காணப்படுகிறது
சுனாமியால் பாதிக்கப்பட்ட உயிர் உடமை அனைத்தையும் இழந்த 65 மீட்டர் வாழ் மக்களின் அணைத்து உரிமைகளையும் உரியமுறையில் அவர்களுடைய கஷ்ட்ட நஸ்ட்டங்களை நிவர்த்தி செய்து வழமையான வாழ்க்கைக்கு திரும்புவ்தட்க்கு இபோதைய அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்லுமாறும் பாதிக்கப்பட்ட அணைத்து மக்களும் ஜனாதிபதி அவர்களின் தலையீட்டில் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமென ஆவலுடன் என்னைப்போண்ற பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்
சக்தி உள்ளவர்கள் இம் மக்களின் பிரச்சனையை அறிந்து இம் மக்களின் தேவையை நிறைவேற்றித் தருமாறு மிகவும் தாழ்மயுடன் கேட்டுக் கொள்கிறோம்
M.H சித்தி நஹார்
மசூர் மௌலான வீட்டு திட்டம்
635 /மசூர் மௌலான வீதி
மருதமுனை 3
Post a Comment