நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின், கூட்டத்தில் கூச்சல், குழப்பம், கைகலப்பு இடைநடுவே நிறுத்தம்!!!
-எம்.வை.அமீர்-
தற்போதைய அரசியல் நிலவரமும், நல்லாட்சிக்கான எமது பங்களிப்பும் எனும் தலைப்பில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் 2015-01-24 மாலை ஒழுங்கு செய்யப்பட்டு எஸ்.முபாரக் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் இடைநடுவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரச்சார செயலாளர் சிராஜ் மஸ்ஹுர் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது சபையில் இருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டதால் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது. குறித்த அமைதியின்மையின் காரணமாக கூச்சல், குழப்பம், கைகலப்பு ஏற்பட்டதுடன் வரவேட்புமண்டபத்தின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதுடன் கதிரைகளும் உடைக்கப்பட்டன.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் உரையாற்ற இருந்த வேளையில் தொடராக இடம்பெற்ற அமைதியின்மையின் காரணமாக கூட்டம் இடைநடுவே கைவிடப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் எஸ்.முபாரக் ஆசிரியர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் மற்றும் பிரச்சார செயலாளர் சிராஜ் மஸ்ஹுர் ஆகியோர் உரையாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது அரசியல்வாதியின் ஆதரவாளர்களே கூட்டத்தை தொடர அனுமதிக்காமல் இடையூறு விளைவித்ததாக சபையில் கூடியிருந்தவர்களால் பேசப்படுவதை அவதானிக்க முடிந்தது பின்னர் கல்முனை பொலிசார் வரவழைக்கப்பட்டு நிகழ்வுக்கு வருகைதந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் உட்பட அதிதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
மிக மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இதற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
ReplyDeleteநல்லாட்சிக்கான தேசியமுன்னணி மக்கள் மத்தியில் பிரபள்ளியம் அடைவதற்கு வருடக் கணக்கில் செய்யவேண்டிய விடயத்தை இந்த சம்பவத்தாலே ஏற்படுத்திக் கொடுத்த இந்த ஜனநாயக விரோதிகளுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நன்றி சொல்ல வேணும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.