கட்சியையும், தலைமைத்துவத்தையும் காப்பாற்றிய ஹக்கீமின் முடிவுக்கான நேரடிக் காரணம்..?
-நவாஸ் சௌபி-
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற எந்த முடிவினையும் அறிவிக்காமல் நிதானமாக இருப்பதுபோல் இருந்து இருக்கின்ற காலத்தையும் கடத்தலாம் என்ற தீர்மானத்துடன் ஹக்கீம் இருந்தார் என்பதற்கு அவர் முடிவினை அறிவிப்பதற்கு முன்பிருந்த இறுதி மூன்று நாட்களுக்குள் அவரே விடுத்த அறிக்கைகள் இரண்டும் முக்கிய சான்றுகளாகும்.
01. கடந்த திங்கட்கிழமை 22 ஆம் திகதி அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்புக்;கான அறிவிப்பை விடுக்கின்ற போது : சமூகம் மற்றும் கட்சி ஆகியவற்றின் பாதுகாப்பையும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக உரிமைகளையும் முதன்மைப்படுத்தி தபால் மூல வாக்களிப்பினை தமது மனச்சாட்சியின்படி அளிக்குமாறு வேண்டினார்.
02. கடந்த புதன்கிழமை 24 ஆம் திகதி தேர்தலுக்கான தமது முடிவு ஏன் தாமதமாகிறது என்பதற்கான காரணத்தை கூறும் போது : றிசாத் பதியுதீன் போன்று அவசரப்பட்டு அள்ளுண்டு போக வேண்டிய அவசியமில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் அவசரப்படாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஏன் அவசரப்பட வேண்டுமெனவும் கேள்வி எழுப்பி பதில் அளித்தார்.
இப்படி முடிவினை அறிவிப்பதில் அவசரப்படத் தேவை இல்லை என்பதற்கு சமூகம் மற்றும் கட்சியின் பாதுகாப்பு என்றெல்லாம் கதைகூறிய ஹக்கீம் இரண்டு நாட்களுக்குள் அவற்றுக்கு என்ன உத்தரவாதம் பெற்று மைத்திரியின் பக்கம் செல்லும் முடிவினை எடுத்தார்? அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் முடிவினை அறிவிப்பதற்கு முன்பு ஹக்கீம் எதற்காக அவசரப்பட்டு றிசாத் பதியுதீனைப் போன்று தானும் அள்ளுண்டு போனார்?
ஆகவே இரண்டு நாட்களுக்கு முன் பேசிய எந்த நியாயத்தின்படியும் ஹக்கீம் இம்முடிவினை எடுக்கவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அப்படி என்றால் இந்த முடிவினை எதனை வைத்து எடுத்தார்.
இதற்காக ஹக்கீம் இப்போது கூறும் காரணங்கள் யாவும் அவர் ஆரம்பத்திலேயே இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என்பதற்கும் சாதகமாகவே இருக்கிறது. எனவே மைத்திரியின் பக்கம் செல்வதற்கு புதிய காரணங்கள் எதையும் ஹக்கீம் கண்டுபிடிக்கவில்லை. மஹிந்த அரசைவிட்டு எப்போது விலகி இருந்தாலும் இந்தக் காரணங்கள் பொருந்தும். மஹிந்தவை விட்டு ஹக்கீம் விலாகாது இருந்தபோதும் மக்களும் இந்தக் காரணங்களைத்தான் சுட்டிக்காட்டி பேசினார்கள். மேலும் இவை எல்லாம் இருக்கத் தக்கதாகத்தான் அவரும் காலத்தைக கடத்திவந்தார்.
எனவே சமூகத்தின் விருப்பத்தை நிறைவேற்றுதல், நல்லாட்சிக்கான மாற்றம், 17வது திருத்த அமுலாக்கத்தை மீண்டும் கொண்டுவருதல் என்று ஹக்கீம் இப்போது பேசுகின்ற சித்தாந்தம் எல்லாம் வெறும் உப்பில்லாத வார்த்தைகள்தான்.
இவற்றுக்கெல்லாம் அப்பால் ஹக்கீம் மக்களோடு மக்களாக தன் பொறுமையை இழந்து ஓடிவந்ததற்கு முக்கியமான ஒரு காரணம் றிசாத் பதியுதீன் வெளியானதும் அவருக்கு கிடைத்த மக்கள் ஆதரவும் தலைவர் அஷ்ரஃபிற்கு அடுத்தபடியான ஒரு தலைவர் என்று அவரை மக்கள் வர்ணித்ததும் எல்லாவற்றுக்கும் மேலாக கிழக்கு மக்கள் அவரை தங்கள் தோள்களில் தூக்கிச் சுமந்த காட்சியும் ஹக்கீமுக்கு உறுத்தலாக இருந்தமையாகும்.
இனியும் இருந்தால் கிழக்கு மக்கள் தன்னை கீழே போட்டுவிட்டு தொடந்தும் றிசாத் பதியுதீனை தலைகளில் சுமந்துவிடுவார்கள் தனது தலைமைத்துவ இருப்பு பறிபோய்விடும் என்ற காய்ச்சல் ஹக்கீமுக்குப் பிடித்துவிட்டது.
அதனால் உடனே தனது நிதானத்தைக் கலைத்துக்கொண்டு அதற்காக தான் இதுவரை பேசிய நியாயங்களையும் மறந்துவிட்டு மக்கள் விரும்பிய முடிவினை எடுத்ததாக காலம் கடந்த ஞானம் பெற்று, அவசர அவசரமாக கல்முனைக்கு வருகின்ற மைத்திரியுடன் தானும் வரவேண்டும் என்று வந்துவிட்டார்.
றிசாத் பதியுதீன் வெளியாகும் வரை, கட்சிக்குள் இருந்த அழுத்தங்களையும் மக்கள் விருப்பினையும் அறிந்தும் ஹக்கீம் மைத்திரியின் பக்கம் செல்லாத நிலையில் அரசுடன் பேசிய அனைத்துப் பேச்சுக்களும் இப்போது அரசு ஏமாற்றிவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டது.
இதற்குமுன் எந்த முடிவினையும் எடுக்காமல் ஹக்கீம் காலத்தைக் கடத்துகிறார் என்றும் மஹிந்த அரசிடமிருந்து வெளியேறாதபடி பைல் பிரச்சினை அவருக்கு இருக்கிறது என்றும் பணப் பெட்டியை அரச தரப்பிலிருந்து பெற்றிருக்கலாம் என்றும் அவரை தாறுமாறாக விமர்சித்த அதே மக்கள், இன்று தலைவர் கட்சி பிளவுபடக் கூடாது என்பதற்காகத்தான் மிகவும் நிதானமாக இருந்து எந்த சேதாரமும் இல்லாமல் தனது முடிவினை அறிவித்திருக்கிறார் என்று தலைவரைப் புகழந்து தங்கள் தோள்களில் தூக்கிச் சுமந்து திரிகிறார்கள். நீங்கள்தான் என்றும் எங்கள் தலைவர் என்பதையும் அவருக்கு நிரூபித்துவிட்டார்கள்.
அதேபோல் கட்சியில் இருக்கின்ற அரசியல் பிரமுகர்களும் மக்கள் விரும்புகின்ற முடிவினை எடுத்தமைக்கு காரணம் என்னவெனில் மீண்டும் தங்கள் பதவிகளையும் கதிரைகளையும் தக்க வைத்துக் கொள்ளத்தான். எனவே அவர்களின் ஆசைகளிலும் மண்ணை அள்ளிப் போட்டுவிடாமல் தொடர்ந்தும் அவர்களையே பாராளுமன்றத்திற்கும் மாகாணசபைகளுக்கும் மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்பதும் இதன் மூலம் தௌ;ளத் தெளிவாகிவிட்டது.
ஆனால் தங்களுக்கான பதவிக் கணக்குகளைப் போட்டவர்கள் மஹிந்தவின் வெற்றிக்குப் பின்னால் எதிர்பார்க்கப்டும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்பு பாதுகாப்பு பற்றிப் போட்ட கணக்கைத்தான் தப்புக் கணக்காக்கிவிட்டார்கள். மக்கள் றிசாத்பதியுதீனைத் தூக்கியதும் முஸ்லிம் காங்கிரஸ் தான் தூக்கிச் சுமந்த தம்புள்ளை, கருமலையூற்று, கிரண்பாஸ்,கரையோர மாவட்டம் என்ற அத்தனை கோரிக்கைகளையும் தொப்பென்று கீழே போட்டுவிட்டது.
இதனால் றிசாத் பதியுத்தீனின் முடிவும் அதற்குப்பின்னால் அள்ளுண்டுபோன ஹக்கீமின் முடிவும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் காட்டிக்கொடுத்திருக்கிறது என்பதை மிக வெளிப்படையாக இப்போது பேசப்படுகின்ற இனவாதப் பிரச்சாரங்கள் நிரூபிக்கின்றன. இதற்கு இன்னும் தீனி போடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் முடிவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் தேர்தல் முடிவும் மஹிந்தவுக்கான வெற்றியை வழங்கலாம்? என்ற நம்பிக்கையை அத்தரப்பினர் வெளிப்படுத்துகின்றனர். அதன்படி ஹக்கீமின் இம்முடிவும் மூன்றாவது முறையாகவும் மூக்குடையும் ஒரு முடிவாகுமா? என்ற கேள்வியும் எழுகிறது.
இதனால் 08 நாட்கள் தனது பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியாமல் ஹக்கீம் மஹிந்தவின் ஆட்சிக்கு இன்னும் 08 வருடங்களை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டாரோ? என்றும் 18 வது திருத்தத்திற்கு ஆதரவளித்த வரலாற்றுத் துரோகத்திற்கு பிராயச்சித்தம் தேடச் சென்று இறுதியில் அந்த திருத்தத்தின் மூலம் மஹிந்த அமைக்கப் போகும் முதலாவது ஆட்சிக்கும் அவரேதான் தனது முடிவினால் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டாரோ என்றும் மக்கள் சந்திக் கதைகள் பேசுகின்றார்கள். அதில் இப்படியும் ஒரு சந்தேகப் பேச்சு வந்திருக்கிறது அதாவது வெற்றி பெற இருந்த மைத்திரியை வழக்கம் போல ஹக்கீம் சேர்ந்து தோற்கடித்துவிட்டாரோ? என்றும் அந்தக் கதைகள் மஹிந்தவின் வெற்றியை இன்னும் ஆதாரப்படுத்துவதாக பேசப்படுகின்றன.
இதன்படி மஹிந்த வெற்றி பெற்றால் உருவாகும் இனவாத ஆட்சிக்குள் முஸ்லிம் சமூகத்தை தூக்கி எறிந்த முடிவினைத்தான் ஹக்கீம் எடுத்திருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை இது அவரது உள்மனதுக்கும் நன்கு தெரியும்.(அதனால்தான் அவர் நிதானித்தார்) இருந்தும் இப்படி மஹிந்தவின் ஆட்சிக்குள் மக்களைத் தூக்கி எறிந்த ஹக்கீமை மக்கள் தூக்கிச் சுமப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இதற்கும் மக்கள் காணும் தகுதி மஹிந்தவை விட்டு வெளியேறிவிட்டதுதான். இந்த தகுதி எமது சமூகத்தின் எதிர்கால ஆபத்தை காப்பாற்றுமா? என்ற கேள்வியை மக்களின் தலைகளின் மீது அமர்ந்திருக்கும் தலைவர்கள் தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளட்டும்.
(மாற்றுக்கருத்துக்கள் கசப்பாக இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டியவை)
உண்மையில் ஹக்கீமின் நிலையை ஒரு கோணத்தில் இருந்து அப்படியே கட்டுரையாளர் படம் பிடுத்து காட்டியுள்ளார். ஆனால் கட்டுரையில் கடைசி பந்தியில் குறிப்பிட பட்ட... " எமது சமூகத்தின் எதிர்கால ஆபத்தை காப்பாற்றுமா?" என்ற கேள்விக்கு பதில் அளிக்கக் கூடிய விடையோ..? வரப்போகும் என்று கட்டுரையாளர் சிந்திக்கும் ஆபத்தை தைரியமாக முகம்கொடுத்து முஸ்லிம் சமூகத்தை வழி நடத்தக்கூடிய ஆற்றலும் தைரியமும் ஹக்கீமிடம் உண்டா என்பது சந்தேகமே.
ReplyDeleteஆனால் ராஜபக்ச வென்று வந்தால் ( நேர்மையான தேர்தல் நடக்காத பட்சத்தில் ) உடனடியாக பெரும்பான்மை இனத்துக்குள்ளேயே ( my3, JVP, UNP போன்றவர்களின் ஆதரவாளர்களுடன் ) குழப்பம் ஏற்படும். அனேகமாக மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் செய்வார்கள். அதேநேரம் பாராளுமன்றம் கலைக்கப்படலாம்.
yes it's true but In Sha Allah may Alla help our muslim community to protect our Musjidh and our Islam From This Government(MR)
ReplyDeleteThis is what100%correct.slmc always need power and money.
ReplyDeleteKurai koori thiriyaamal ondru paduwom sahodhararkale. Allah aatchi puratta naadinal adhu nichchayam nadakum. naamum samuha thuroahihaluku ethiraha ondrinaindhu aatchi maatraththin pangaalihalavom.
ReplyDeleteயா அல்லாஹ் முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்துவாயாஹ......!
ReplyDelete