இராணுவ சதித்திட்டம், மஹிந்த + கோத்தாவிடம் விரைவில் விசாரணை
ஜனாதிபதித் தேர்தலின் போதான சூழ்ச்சித்திட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப்புலனாய்வுப் பிரிவினரே இந்த விசாரணையை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சூழ்ச்சித்திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊடகப்பேச்சாளர் மொஹான் சமரநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் சூழ்ச்சித்திட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சூழ்ச்சித்திட்டம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், இராணுவ சூழ்ச்சித் திட்டம் ஒன்றின் மூலம் ஆட்சியை கைப்பற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முயற்சித்தார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment