Header Ads



முகமது நபியை நிந்தித்தால்தான் தாக்குதல் - யேமன் அல்கயீதா பொறுப்பேற்பு

அரேபிய வளைகுடா அல்கயீதா ( ஏக்யூஏபி) என்ற யேமனிலிருந்து இயங்கும் அமைப்பு பிரான்ஸின் நையாண்டி இதழான "ஷார்லி எப்டோ" மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறது.

யூ ட்யூபில் பிரசுரிக்கப்பட்ட வீடியோ ஒன்றில், இந்த இதழ் இறைதூதர் முகமது நபியை நிந்தித்தால்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறுகிறது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சகோதரர்களில் ஒருவரான ஷெரிப் குவாஷி தான் இந்த அமைப்பின் சார்பாக செயல்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் குழு இந்தத் தாக்குதலை முன்பு வரவேற்றிருந்தாலும், அதை நடத்தியது தான் தான் என்று பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.

No comments

Powered by Blogger.