Header Ads



ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் முஜீபுர் ரஹ்மான் விடுக்கும் வேண்டுகோள்

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சில அமைச்சுக்களின் செயலாளர்களும் சில வர்த்தகர்களும் மோசடிகள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜூபர் ரஹூமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நாட்டிலிருந்து தலைவர்களின் நன்கொடைகள் மற்றும் உதவிகள் போன்றவற்றைக் கொள்ளையிட்ட பல அதிகாரிகள் இருக்கின்றனர்.  அதேபோன்று, குடு வர்த்தகத்தின் ஊடாக கடந்த அரசாங்கத்தின் உதவியினால்
இந்த நாட்டு மக்களின் பணத்தை சூறையாடிய பல வர்த்தகர்கள் இந்நாட்டில் இருக்கின்றனர், என்றார் அவர்.

ராஜபக்ஸ ஆட்சியின் கீழ் இந்த நாட்டு மக்களின் நிதியை உழைத்த மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் குடு வர்த்தகர்களை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் நிறுத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் முஜூபர் ரஹூமான் தெரிவித்தார்.

அத்துடன், அவர்களை உடனடியாக சட்டத்திற்கு முன் கொண்டு வருமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தாம் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. முஜிபுர் ரஹமான்,

    புதிய ஜனாதிபதி ஒன்றும் விவரம் தெரியாவரல்லர். நல்லாட்சிக்கு அவசியமானதும் முக்கியமானதுமான பல சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் உயர்த்தப்பட வேண்டிய உறுப்பினர்களின் கைகளின் எண்ணிக்கைதான் இப்போது முக்கியமானது.

    அந்தக்கரங்களில் பல கறைபடிந்தவையே.

    இத்தகையோர் ஒன்றும் மக்களின் நலனை விரும்பியோ அல்லது தமிழ் சினிமா வில்லன்களைப் போல சடுதியாக திருந்தியோ ஜனாதிபதிக்கு உதவ முன்வந்தவர்களல்லர். ஆனாலும் வேறுவழியில்லை முள்ளை முள்ளால் எடுப்பதுபோல அவர்களின் கரங்களைக்கொண்டுதான் அவர்களின் கண்களையே குத்தியாகவேண்டும்.

    அதுவரையில் பொறுத்திருப்போம்!

    ReplyDelete

Powered by Blogger.