'கட்சிக்காக உயிரைத் தியாகம் செய்த, தந்தையின் ஆத்மாவை இந்த சஜித் காட்டிக்கொடுக்க மாட்டான்'
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்ட நகைப்பிற்குரிய பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பெலியத்த பிரதேசத்தில் 03-01-2015 இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளப் போவதாக செய்யப்படும் பிரச்சாரமே அரசாங்கத்தின் மிகப்பெரிய தேர்தல் பிரச்சார நகைச்சுவையாக கருதப்பட வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின் புதிய துருப்புச் சீட்டு என்ன?
புதிய துருப்புச் சீட்டு என்னவென்றால், சஜித் பிரேமதாச பிரதமர் பதவிக்காக ஆளும் கட்சிக்கு செல்கின்றார் என்பதுதான். இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாக இதனைக் கருத வேண்டும்.
இந்த இழிவான பிரச்சாரம் முகநூல், டுவிட்டர் மற்றும் இணையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.
நான் ஒன்றைச் சொல்ல விரும்பகின்றேன். நாட்டை சீரழிக்கும் இந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஒரு நிமிடத்திற்கேனும் நினைத்தார்களா? கட்சிக்காக உயிரைத் தியாகம் செய்த தந்தையின் ஆத்மாவை இந்த சஜித் மகன் காட்டிக் கொடுப்பான் என்று.
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு நான் விலகப் போவதில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Post a Comment