Header Ads



இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க, மஹிந்த தலைமையிலான கூட்டணிக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பேன்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவும் பொறுப்பு சொல்ல வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகவியலாளர் ஒருவருக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ச அனைத்து விடயங்களிலும் சர்வாதிகார போக்கினைப் பின்பற்றினார். இதனால் குடும்ப ஆட்சி நிலவி வருவதாக செய்யப்பட்ட பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடிய சாத்தியங்கள் கிடைக்கவில்லை.

சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென அரசாங்கம் கருதிய போதிலும் பசில் ராஜபக்ச போன்றவர்கள் அதனை தடுத்து நிறுத்தினர்.

வடக்கு கிழக்கு வாக்குகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்தமை மஹிந்த ராஜபக்ச தோல்வியடைய மற்றுமொரு வலுவான காரணியாக அமைந்தது. தேர்தல் மேடைகளில் தாம் ஆற்றிய உரைகள் மஹிந்தவிற்கு எதிராக அமைந்தது என்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமது உரைகளை மலினப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுகின்றது. யாரையும் தனிப்பட்ட ரீதியில் இழிவுபடுத்தும் உத்தேசம் எனக்கு கிடையாது.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையிலான கூட்டணிக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பேன் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. என்ன கழுதை மாதிரி கத்தினால் போதுமா? நீங்க வீண் முயற்சி செய்வதில் ஒரு பண்டக்காயும் நடக்கப்போவதில்லை. ஆட்சியில் இருந்த உங்களையும் மகிந்த ஐயரின் குடும்பத்தையும் நாட்டு மக்கள் சரியாகவே புரிந்துவிட்டனர். மக்களின் பணத்தை சுரண்டித் திண்டு கின்னஸ் புத்தகத்தில் பதியுமளவு பெரும் சேவை செய்தவர்களே நீங்கள். நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. உங்களுக்கும் மகிந்தரின் குடும்பத்துக்கும் சொகுசு வாழ்க்கை. ஏழை மக்கள் பட்டினி.

    ReplyDelete
  2. Mr. 2/2=0, மகிந்தவின் தோல்விக்கு உனது இனவெறி பிரசாரமும் ஒரு காரணம் என்பது நாடறிந்த உண்மை. இவரின் மேதாவித்தனத்தை கீழுள்ள இணைப்பின் மூலம் பார்க்கலாம்.

    https://www.youtube.com/watch?v=1UMO0jqC7ww

    https://www.youtube.com/watch?v=oj-mfXy2IMw

    ReplyDelete
  3. உன்னாலே அவன் கெட்டான் அவனாலே நீ கெட்டாய் உங்கள் அணைவரின் ஊழல்கலும் மக்கள் முன்வருகிறது இனிமேலும் இராஜபோக வாழ்க்கை வாழ மனப்பால் குடிக்கிறார்.உங்கள் இனவாத அரசியல் இனியும் எடுபடாது.உங்கள் மனைவியே சட்டவிறோதமாக பொய்த்தகவல் கொடுத்து 2 பாஸ்போட் எடுத்து இருக்கிறார்.இப்படிப் பட்ட உங்களிடம் மறுபடி ஆட்சியை தர மக்கள் மாக்களல்ல,மீறி அது நடந்தால் இந் நாட்டை காப்பாத்த யாராலும் முடியாது.

    ReplyDelete
  4. துவேச அறைகூவல்களால் செஞ்சால்வை நாயகரை மண்கவ்வ வைத்த நீங்கள் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பது யாரைத் தெரியுமா?

    உங்கள் சிங்கள பௌத்த மக்களைத்தான்.

    பாவம் அந்த மக்கள். உங்களது பதவி ஆசைக்கும் சொகுசு வாழ்க்கைக்கும் தாங்கள் பலியாவது தெரியாமல் வாழ்ந்த கொண்டிருக்கின்றார்கள்.

    தோல்வியடைந்து ஓடிப்போன கிழட்டுச் சிங்கத்தை தன் வாலில் கட்டி இழுத்து வந்த குள்ளநரிக்குக் கடைசியில் என்ன நடந்ததோ அதுதான் உங்களுக்கும் நடந்தது.

    ReplyDelete

Powered by Blogger.