நான் சரிவர பேட்டிங் செய்யமாட்டேன், பவுலிங்கும் செய்யமாட் டேன் - ஆஸ்திரேலியா பிரதமர்
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கேப் டன் ஸ்மித் தாமதமாக டிக்ளேர் செய்யும் முடிவை எடுத்ததற்கு பிரதமர் டோனி அபோட் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், தீவிர கிரிக்கெட் ரசிகர். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு அணிகளை அவர் எப்போதும் கவுரவிக்கத் தவறியதில்லை. தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியையும் அவர் நேரில் சந்தித்து கவுரவித்தார். புத்தாண்டு தினத்தையொட்டி இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் வீரர்களுக்கு பிரதமர் டோனி அபோட் நேற்று சிட்னி யில் உள்ள பிரதமரின் இரண்டாவது அதிகாரபூர்வ இல்லமான கிரிபிளி ஹவுசில் தேனீர் விருந்தளித்தார். இந்திய அணியின் புதிய கேப்டன் விராட் கோஹ்லி, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் இரண்டு அணிகளின் வீரர் கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் அபோட் பேசுகை யில் ‘ஜாலி’யான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
‘‘கிரிக்கெட்டில் எதிரணி வீரர்களை திட்டுவதில் நான் ஈடுபட்டிருக்கிறேன். நான் சரிவர பேட்டிங் செய்ய மாட்டேன், பவுலிங்கும் செய்ய மாட் டேன். எனது பீல்டிங்கும் மோசமாக இருக்கும். ஆனால், எதிரணி வீரர்களை நன்கு திட்டுவேன். இந்த அடிப்படையில்தான் பல்கலைக்கழக அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நினைக்கிறேன். ஆனால், இது போன்று இப்போது அணியில் யாரும் இல்லை என நான் உறுதி கூறுகிறேன்,’’ என்று அவர் இரு அணி வீரர்களிடமும் பேசு கையில் நகைச்சுவையாகக் கூறினார்.
மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட் டியின் ஐந்தாம் நாளில் இரண்டாவது இன் னிங்ஸை டிக்ளேர் செய்வதில் ஆஸ்திரேலிய கேப் டன் ஸ்மித் தாமதம் செய் தார். இதனால், இந்திய அணி எதிர் கொள்ளவேண்டிய ஓவர்களின் எண்ணிக்கை 70 ஆக குறைந்தது. இந்தியா போட்டியை டிராவும் செய்தது.
ஸ்மித்தின் தாமதத்தால் 3-0 என்ற கணக்கில் தொடரை வெல்ல வேண்டிய நிலை மாறி 2-0 என வெல்ல வேண்டியதாகிவிட்டது என அவர் மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இது குறித்து நேற்று பிரதமர் டோனி அபோட்டிடம் கேட்கப்பட்டது. அவர் கூறுகையில்,
‘‘இதுபற்றி கருத்து கூறுவது என்னுடைய வேலையில்லை என்று நான் முத லில் நினைக்கிறேன். இந்தக் கோடை காலத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அவர்களுக்கு எந்த வகையிலும் வாய்ப்பளிக்காமல் ஆஸ்திரேலியாவை பலம் வாய்ந்த இடத்தில் கொண்டு சென்று நிறுத்துவது கேப்டன் ஸ்மித்தின் வேலை. அதை அவர் சிறப்பாகச் செய்துள்ளார் என்றே நான் கருதுகிறேன்,’’ என்றார்.
Post a Comment