குலுக்கல் மூலம் ஆசிரியைகளை நியமித்த அதிபரின் அதிரடி - முஸ்லிம் பாடசாலையில் சம்பவம்
-எம்.வை.அமீர் -
கடந்த 2015-01-19ல், 2015 ம் வருடத்த்தின் முதலாம் தரத்துக்கான மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நாடுமுழுவதும் இடம்பெற்றது. இந்த ஆண்டுக்காக சுமார் மூன்று லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்கள் இணைந்து கொண்டனர். பிரதான நிகழ்வு காலியில் மஹிந்த வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த 2015 ம் வருடத்த்தின் வித்தியாரம்ப நிகழ்வுகள் கல்முனைக் கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கல்விக்கோட்டத்தின் அல்ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற போதே மேற்படி குலுக்கல் மூலம் ஆசிரியைகளை நியமித்த அதிபரின் அதிரடி நிகழ்வு இடம்பெற்றது.
சாய்ந்தமருது கல்விக்கோட்டத்தில் பல்வேறு பாடசாலைகள் இருக்கின்ற போதிலும் அதிகமான பெற்றோர் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் தங்களது பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என அடம்பிடித்ததன் காரணமாக இம்முறை முதலாம் வருடத்துக்காக சுமார் 270 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
பாடசாலை வகுப்பறையில் எத்தனை மாணவரை அனுமதிப்பது என்ற சுற்றுநிருபத்தையும் மீறியதாகவே 6 வகுப்புகளாக பிரிக்கப்பட்டு வகுப்புகளுக்கு ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிதிகளும் பெற்றோரும் குழுமியிருந்த வேளையிலேயே அதிபர் ஏ.வி.முஜீனின் அதிரடி பிரதிஅதிபர் திருமதி றிப்கா அன்சாரினால் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலையின் அதிபர் ஏ.வி.முஜீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன் அவர்கள் கலந்து கொண்ட அதேவேளை சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.ரஹீம் அவர்களும் கலந்து கொண்டார். பாடசாலையின் பிரதிஅதிபர் திருமதி றிப்கா அன்சார் உட்பட ஆசிரியர்கள் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். புதிதாக வருகைதந்த மாணவர்களை தற்போது இரண்டாம் வருடத்துக்கு சென்றுள்ள மாணவர்கள் மாலையிட்டு இனிப்புப் பண்டங்கள் வழங்கி வரவேற்றதை காணமுடிந்தது.
Post a Comment