Header Ads



''இருக்கின்ற எஞ்சிய தினங்கள், மிகவும் முக்கியமானது' - றிசாத் பதியுதீன்

-    இர்ஷாத் றஹ்மத்துல்லா -

இந்த  தேர்தல் என்பது சிறுபான்மை சமூகத்தின் வாழ்வினை அல்லது அழிவினை தீர்மாணிக்கும் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் கடந்த கால தேரதல்களை விட அனைத்து மக்களும் கடமையுணர்வுடன் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் சற்று முன்னர் புத்தளம் தில்லையடியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது தேசிய தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய எஹ்யான் தலைமை தாங்கினார்.

இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் தேவையென்பதை மக்களும், அரசியல் தலைமைகளும் எற்கனவே தீர்மானித்துவிட்டன.வன்னி மாவட்ட மக்களது வாக்கினால் பாராளுமன்றம் வந்த நான் ,இந்த அரசின் முக்கிய அமைச்சுப்பதவி மற்றும் 3 மாவட்டங்களின் அபிவிருத்தி குழுவின் தலைவராகவும் இருந்து பணியாற்றியுள்ளேன்.எனது இந்த பதவி காலத்தில் சகல சமூகங்களின் நலன் குறித்து நான் போதமான பணிகளை செய்து கொடுத்துள்ளேன்.சிலர் மேடைகளில் மக்களுக்கு பிழையான தரவுகளை வழங்குகின்றனர்.நான் பிரதி நிதித்துவப்படுத்தும் வன்னி மாவட்டம் அபிவிருத்தி காணவில்லை என்று.அதில் உண்மையும் இருக்கலாம்.குறிப்பாக மக்கள் வாழ்வதற்கு தெவையான காணிகளை பெறுவதில் உயர் மட்டம் முதல் அடி மட்டம் வரை பல  தடைகள் இருக்கின்றன.குறிப்பாக ஆயிரக்கணக்கான காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.அவற்றை இம்மக்களுக்கு பெற்றுக் கொடுங்கள் என்று கேட்டால,எமக்கெதராக ஏற்படுத்தப்பட்டுள்ள கடும் போக்கு அமைப்பினரை அனுப்பி எமது பணிகளை இனவாதமாக காட்ட முனைகின்றனர்.

நாம் சுயநலம் கொண்ட அரசியல் வாதியாக இருந்திருந்தால் எனது பதவிகளை துறக்க தேவையிருந்திருக்காது,நான் பதவி துறந்ததால் வன்னி மாவட்ட எமது மக்கள் அரசாங்கத்தின் அளுதத்தினால் சிரமங்களை சந்திக்கின்றனர்.பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.எமது மக்களை பொறுமை காக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

முஸ்லிம்களுக்கும், ஏனைய சமூகத்திற்கு எதிராக மு்னெடுக்கப்பட்ட அநியாயங்களை தொடர்ந்தும் பார்த்துக்கொண்டு அரசில் இருக்க முடியாது என்பதை நாம் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தோம்.

இருக்கின்ற எஞ்சிய சில தினங்கள் மிகவும் முக்கியமானது ஓய்வின்றி இரவு பகல் பாராது எமது மக்களுக்கு தகவ்களை எடுத்து செல்வதுடன்,விளக்கமில்லாமல் இருக்கும் எதிர்தரப்பு  மக்களிடமும் மைத்திரி ஆட்சியின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும்.அப்போது தான் நாம் எமது பணியினை சரியாக செய்ததாக அமையும் என்றும் தேசிய தலைவர் றிசாத் பதியுதீ்ன் கூறினார்.

No comments

Powered by Blogger.