டுபாயில் இந்த மனிதரை காணலாம்
உடலின் தோலை நினைத்தபடி எலாஸ்ட்டிக் ஆக இழுத்துக் காட்டி சாதனை படைக்கும் உலகின் ஒரே எலாஸ்ட்டிக் மனிதரான கேரி ‘ஸ்ட்ரெச்’ டர்னர் துபாயில் பல்வேறு சாதனை நிகழ்ச்சிகளை செய்து காட்டவுள்ளார்.
வரும் 23-ம் தேதி துபாயில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியிலும், பின்னர் அந்நாட்டில் உள்ள பல்வேறு மனமகிழ் மன்றங்களில் நடைபெறும் பிற நிகழ்ச்சிகளிலும் இவர் தனது சாகசங்களை செய்து காட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'எஹ்லெர்ஸ்-டான்லோஸ் சின்ட்ரோம்' எனப்படும் அரிய வகை தோல் பாதிப்பால் தாக்கப்பட்ட இவர், அந்த பாதகத்தையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, உலகளாவிய அளவில் சாதனை மனிதராக வலம் வருகின்றார்.
உடலின் அனைத்து பாகங்களின் தோலும் இவர் இழுத்த இழுப்புக்கு எலாஸ்ட்டிக் போல் விரிவடைவது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றது. இங்கிலாந்தை சேர்ந்த கேரி ‘ஸ்ட்ரெச்’ டர்னர் இந்த திறமையை பயன்படுத்தி உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.
இவ்வகையில், வரும் 23 தேதி முதல் துபாயின் பல பகுதிகளில் இவரது சாகச நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment