Header Ads



அரசியல் வானில் தோன்றி மறையும் நம்பிக்கை நட்சத்திரமா..? ''நல்லாட்சிக்கான கோசம்''

-Kalabooshanam   J.M.Hafeez-

உலக வரலாற்றில் ஒவ்வொரு நாடும் தேர்தல் காலங்களில் தத்தமது கொள்கைகளை விளக்கி சூராவளிப் பிரசாரம் செய்வது வழக்கம். வளர்ச்சியடைந்த நாடுகள் பொதுவாக தமது வெளிநாட்டுக் கொள்கைகளையே முதன்மைப் படுத்தும். சிலநாடுகள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகளை முதன்மைப் படுததும்.

ஆனால் இலங்கை வரலாற்றில் 1948 முதல் 1984 வரை உணவை மையமாக வைத்து அரிசயல் செய்யப்பட்டது. 1960 காலப்பகுதியில் அரிசி விலை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் அன்றைய ஆட்சி கவிழ்ந்து. 1970 ல் டட்லி சேனாநாயகாவின் ஆட்சியில் ஒருகொத்து இலவச அரிசி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. 1977 ல் ஜே.ஆரின் 7 கிலோ தானியம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீமாவோ    அம்மையார் 1971ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு 2 படி அரிசி தருவதாகக் கூறினார்.சந்திரனில் இருந்தாவது அரிசி கொண்டு வருவதாகக் கூறியே வெற்றி பெற்றார். 1977ல் அவரது இரண்டு படிஅரிசியே அவருக்கு பிரச்சினையானது. இவையாவும் இலங்கையின் அரசில் ஆட்சி மாற்ற வரலாறு. ஆனால் 1990 களின் பின்னர் யுத்தத்தை மையமாக வைத்து அரசியல் செய்யப்பட்டது. அது இன்று வரை நீடித்துள்ளது. அரச தரப்பினர் இன்னும் யுத்த வெற்றியில் குளிர் காய்கின்றனர். இது எதிர்வரும் 8ம் திகதி உடன் மீண்டும் ஒலிக்குமா? அல்லது ஒழியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனால் இன்று எதிரணி புதிய ஒரு யுத்தியைக் கையாள்கிறது. அதுதான் நல்லாட்சி. நல்லாட்சி பற்றி ஜனாதிபதி கண்டியில் வைத்து வழங்கிய வரவிலக்கணம் இதோ. நுல்லாட்சியை  கோட்பாட்டில் காண முடியாது. நடத்தையில்தான் காணவேண்டும். அதுவும் பெறுபேற்றை மையமாக வைத்து இருக்க வேண்டும் என்றார். அதற்கு உதாரணமாக அவரைத் தவிற மற்ற எல்லோரது ஆட்சியிலும் கொடுங்கோள் நிலவியதாகவும் ஆங்காங்கே குண்டுகள் வெடித்ததாகவும், பலர் கொலை செய்யப்பட்டதாகவும் நாட்டில் குழப்ப நிலை காணப்பட்டதாகவும் தெரிவித்தார். தனது ஆட்சி வந்த பிறகு யுத்த பீதி முற்றாக நீங்கி, மக்கள் சுயமாக இயங்குவதாகவும் தெரிவித்தார். அத்துடன் நாடு அபிவிருத்தி கண்டுள்ளதாகவும் கூறினார். எனவே தான் ஏற்படுத்தியதே  நல்லாட்சி. ஏனைய வர்கள் மேற்கொண்டது கொடுங்கோள் ஆட்சி என்று வரைவிலக்கணப் படுத்தினார். 

அதேநேரம் ஹெலஉரிமையில் இருந்து பிரிந்து சென்ற மேல்மாகாண சபை அங்கத்தவர் உதய கம்மன்பில கூறும் விடயம் எதிரணியின் பஸ் நடாத்துனர் 'நல்லாட்சி நல்லாட்சி...' என்று கூற  அதன் சாரதி சந்திரிகா அம்மையார் பிரிவினையை நோக்கிச் செல்லும் சாரதி என்கிறார். அமைச்சர் விமல் வீரவன்ச போகுமிடமெல்லாம் கூறுவது ' நல்லாட்சி என்ற தங்கையைக் காட்டி விகாரமான அக்காவை திருமணம் செய்து வைக்கும் முயற்சி என்பதாகும்.

அதேநேரம் எதிரணிகளின் கோசமோ 'நல்லாட்சியை ஏற்படுத்துவது' என்பதாகும். எனவே யுத்த வெற்றி, யுத்த மமதை, தனி நாடு, இராட்சத அபிவிருத்தி என்ற கோசங்களை எல்லாம் தாண்டி இன்று 'நல்லாட்சி' என்ற கோசம் மிகைத்துள்ளது. இது ஒரு நல்ல சகுனம். ஆனால் விமல் வீரவன்ச கூறுவது போல அக்காவா? தங்கையா? என்பதைப் பொறுந்திருந்து பார்க்க வேண்டும். அல்லது கம்மன்பில கூறுவதுபோல் பஸ் ஏறினாலும் சாரதி திசை திருப்பலாம். ஆனால் சாரதியை திசை மாற்றவைக்க பிரயாணிகளால். முடியும். அல்லது சாரதியை இழுத்து வீசிவிட்டு வேறு ஒரு சாதரதியை யாவது அமர்த்தலாம் அல்லவா? எப்படியோ யார் குற்றியாவது அரியாக வேண்டும். நல்லாட்சி மலரவேண்டும். அதற்கான சைகை போடப்பட்டாயிற்று.

1 comment:

Powered by Blogger.