Header Ads



பாரிய ஊழல் சம்பவங்களை விசாரிப்பதற்காக குழு - ரவுப் ஹக்கீமும் உள்ளடங்குகிறார்

கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல் சம்பவங்களை விசாரிப்பதற்காக ஊழல் எதிர்ப்பு குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான இந்த குழுவில் மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம் ஆகிய அமைச்சர்களும், ஆர்.சம்பந்தன், அனுர திசாநாயக்க, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜெனரல் சரத்பொன்சேகா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்த குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அரச அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், நிதி மற்றும் கணக்காய்வாளர்களைக் கொண்ட துரித பதிலளிக்கும் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதன் இணைபபாளராக ஜே.வி.பி யிபின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க செயற்படுகிறார்.

ஊழல் சம்பவங்களை விசாரிக்கும் போது சட்டத்தின் வரையரைகள் போதுமானதாக அமையாத பட்சத்தில் விசேட சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கும் நேற்று கூடிய அமைச்சரவை தீர்மரித்துள்ளது.

கொழும்பு துறைமுகை நகரம் போன்ற பாரிய செயற்றிட்டங்களை செயற்படுத்தும் போது மீளாய்வுக்காகவும் அமைச்சர்களின் பங்களிப்புடன் விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக்கும் உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்காமலிருப்பதற்கும் நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பெரும்போகத்தின் விளைச்சலால் பாரிய தொகையிலான நெல் சந்தைக்கு கிடைக்கும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரியை தகுந்த அளவில் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்தை கண்காணிப்பதற்காக பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகரின் தலைமையில் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு விபரங்களை வழங்கும் போது நிறுவன சட்டதிட்டங்களை வலுவாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்துவதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.