கடந்த காலத்தில் விட்ட தவறை, முஸ்லிம் காங்கிரஸ் இனிமேலும் விடக்கூடாது - சம்பந்தன்
கிழக்கில் முதலமைச்சர் பதவியைக் கோரும் கூட்டமைப்பின் கருத்து நியாயமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புரிந்து கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,
சிறுபான்மையினரைப் பெரும்பான்மை இனமாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களே அதிகம் வாழ்கின்றனர். அதேவேளை, கிழக்கு மாகாணசபையில் தற்போது அங்கம் வகிக்கும் கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சியாகத் திகழ்கின்றது.
எனவே, கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் நாம் இன்று தெளிவாக எடுத்துரைத்தோம்.
நாம் முன்வைத்த கருத்துகள் நியாயமானது என்று ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் எம்மிடம் கூறினர். எனவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்மை ஆதரிக்க முன்வரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு முன்வந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அரவணைத்துக் கொண்டு கிழக்கு மாகாணசபையில் நாம் ஆட்சியமைப்போம்.
கடந்த காலத்தில் விட்ட தவறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனிமேலும் விடக்கூடாது.
கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Slmc pls compromise with tna. If you come downin the future allah will respect you.pls come down shake of allah
ReplyDeletewhy can not accept the muslim CM by TNA? TNA should agree to become a muslim CM from 09 provincial council in SL.because TNA already got a CM in north.
ReplyDelete