Header Ads



'வாய் பொய்யுரைத்தாலும், நாக்கு பொய் உரைக்காது' - மகிந்த ராஜபக்ஷ

(JM.Hafeez)

குழப்ப நிலை கொண்ட நாட்டை நான் ஒரு ஸ்தீர நிலைக்கக் கொண்டு வந்தேன். அதுவே நல்லாட்சியாகும். ஏன்னை எதிர்ப்பவர்கள் நாட்டை கூறு பொட்டு குழப்பில் வைத்திருந்தனர். அது எப்படி நல்லாட்சியாக முடியும் எனப் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 (1.1.2015) கண்டி மத்திய சந்தை முன் இடம் பெற்ற மாபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருடனை துரத்துவோர் திருடர்களாக இருந்தால் எப்படி இருக்குமோ அதேபோல் இன்று ஊழல் செய்தவர்கள்தான் ஊழல் ஊழல் என்று ஊளையிட்டுக் கொண்டு பின்னால் துரத்து கின்றனர். நான் ஆட்சி பீடம் ஏறும் போது நாட்டில் ஆங்காங்கே குண்டுகள் வெடித்தன. ஸ்ரீ தலதா மாளிகைக்கு குண்டு வைத்ததனர். அனுராதபுர ஸ்ரீமகா போதியில் கொலைகள் செய்தனர். காத்தான்குடிப் பள்ளியில் தொழுது கொண்டிருந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அரந்தலாவையில் பௌத்த துறவிகள் பச்சை பச்சையாகக் கொண்டு குவிக்கப்படடார்கள். ஓமந்தையில் ஒரு சோதனைச் சாவடி. அதற்கு அப்பால் வேறு ஆட்சி நடந்தது. அதற்கு இப்பக்கம் எமது ஆட்சி நடந்தது. அதனை நாம் நல்லாட்சி என்று கூற முடியாது. 

ஆனால் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் நிலைமை படிப்படியாகச் சீரடைந்தது. ஒரு நாடு என்ற அடிப்படையில் நாட்டு மக்களைத் தூண்டினேன். எனது புதல்வர்களை கடற்படையில் சேர்த்து முன் மாதரி காட்டினேன். இதனால் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் முப்படைகளிலும் இணைந்தனர். நாட்டுக்காகப் பாடு பட்டனர். பின்னர் நாட்டில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள கடந்த ஆட்சியின் போது ஒரு ஆணையைக் கேட்டேன். அதனையும் தந்தீர்கள். நாட்டை அபிவிருத்தி செய்தேன். தென் கிழக்காசியாவில் முதல் நிலையில் நாம் இருக்கிறோம். ஆசிய பசுபிக் நாடுகளுடன் ஒப்பிடும் போது நாம் சில துறைகளில் 15 வதும் 16 வதும் இடங்களில்  உள்ளோம். அடுத்துவரும் 2016 அல்லது 17 ம் ஆண்டு ஆரம்பிக்கும் போது கண்டி மக்கள் ஒரு மணித்தியாலத்தில் கொழும்பைச் சென்றடைய முடியும். இப்படியான வளர்ச்சியை நாம் பதிவு செய்துள்ளோம். இதுதான் நல்லாட்சி. 

அதற்கு அடுத்ததாக நாட்டை மேலும் ஸ்தீர நிலையில் கட்டி எழுப்ப ஒரு ஆணை கேட்கிறேன். சிலரால் இதனைப் பொறுக்க முடியாமல் சதி செய்கின்றனர். வெளிநாட்டுச் சதித்திட்டங்களின்படி இயங்குகின்றனர். எனவே எமக்கெதிரான சர்வதேச சதித்திட்டங்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.

பஸ்வண்டிகளில் சிலர் பிற்பொக்கட் அடித்து விட்டு கள்வன் கள்வன் என்று முன்னே ஓடுவர். கள்வனும் சேர்ந்து கற்பனைக் கள்வனை விரட்டுவான். இதேபோல் இன்று எம்முடன் இருந்தவர்கள் சிலர் கற்பனைக் கள்வனை முன்னிருத்தி திருடன் திருடன் என்கின்றனர்.  திருடனை துரத்தும் அவர்கள்தான் திருடர்கள். இதேபோல் இன்று ஊழல் செய்தவர்கள்தான் ஊழல் ஊழல் என்று ஊளையிட்டுக் கொண்டு பின்னால் துரத்து கின்றனர்.

விவசாயியன் புத்திரர் என்று மன்னைத் தானே கூறிக் கொள்ளும் மைத்திரபால சிரிசேனாவிற்கு பசளை மானியம் தொடர்பாக மறந்து விட்டது. ஆனால் விவசாயிகளுக்கு பசளை மானியத்தை நான் வழங்கி இருந்தேன். மாணவர்களுக்கிடையே விஞ்ஞான அறிவை வளர்க்கும் முகமாக ஆயிரக்கணக்கான மகிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்களை நிறுவி உள்ளோம். ஆனால் மைந்திரிப்hல சிரிசேனா உயர் கல்வியைப் பணத்திற்கு விற்கத்திட்டமிட்டுள்ளார்.

வாய் பொய்யுரைத்தாலும் நாக்கு பொய் உரைக்காது என்பார்கன். அதேபோல் நிறைவேற்று அதிகாரத்தை மாற்றுவது தொடாபாக ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொன்றைக் கூறுகின்றனர். ஆனால் நானே நாட்டு நல் தவிர வேறு எதற்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை என்றார்..

No comments

Powered by Blogger.